அரசியல் செய்தி

தமிழ்நாடு

காரில் சிக்கிய ரூ.10 கோடி: மந்திரியை அதிர வைத்த கட்சிக்காரர்!

Updated : ஏப் 06, 2021 | Added : ஏப் 05, 2021 | கருத்துகள் (47)
Share
Advertisement
\மார்ச். 23, இரவு, திருச்சி - கரூர் சாலை பெட்டவாய்த்தலை பகுதியில், இரு கார்களில் சென்றவர்களுக்கு இடையே, கடும் வாக்குவாதம் ஏற்பட்டு, இரு தரப்பும் மோதிக் கொண்டிருக்கின்றனர் என, சுங்கச்சாவடி பகுதியில் இருந்து, திருச்சி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.நெடுஞ்சாலை காவலுக்கு நின்று கொண்டிருந்த போலீசார், வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்தவர்களை நோக்கிச் சென்றனர்.அதே தகவல்,
election, தேர்தல்

\மார்ச். 23, இரவு, திருச்சி - கரூர் சாலை பெட்டவாய்த்தலை பகுதியில், இரு கார்களில் சென்றவர்களுக்கு இடையே, கடும் வாக்குவாதம் ஏற்பட்டு, இரு தரப்பும் மோதிக் கொண்டிருக்கின்றனர் என, சுங்கச்சாவடி பகுதியில் இருந்து, திருச்சி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.நெடுஞ்சாலை காவலுக்கு நின்று கொண்டிருந்த போலீசார், வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்தவர்களை நோக்கிச் சென்றனர்.

அதே தகவல், தேர்தல் அலுவலர் ராஜசேகரனுக்கும் செல்ல, அவரும் பறக்கும் படையுடன் அங்கு சென்றார்.போலீசாரையும், பறக்கும் படையினரையும் பார்த்ததும், ஒரு காரில் இருந்தவர்கள் வெளியில் குதித்து தப்பிச் சென்று விட்டனர். இன்னொரு காரில் இருந்தவர்கள், ஒரு மூட்டையை வெளியே வீசிச் சென்றனர்.

சோதனை செய்தபோது அதில், 500 ரூபாய் கட்டுகளாக, 1 கோடி ரூபாய் இருந்தது. விட்டுச் சென்ற காரை சோதித்ததில், அதில், 2 கோடி ரூபாய் கண்டுபிடிக்கப்பட்டது.அந்த கார், முசிறி எம்.எல்.ஏ., செல்வராஜின் மகன் ராமமூர்த்திக்கு சொந்தமானது. காரில், முசிறி அ.தி.மு.க., பிரமுகர்கள் ரவிச்சந்திரன், சத்தியராஜா, எம்.ஜி.ஆர்., இளைஞரணி செயலர் ஜெயசீலன், ஓட்டுனர் சிவகுமார் ஆகியோர் இருந்தனர் என்பதை பின்னர் கண்டறிந்தனர்.

பணம் எங்கே இருந்து எப்படி வந்தது என, அவர்களிடம் விசாரித்தனர். 'அது எங்கள் பணமே அல்ல' என, காரில் இருந்தவர்கள் கை விரித்தனர். பறக்கும் படையினர் பணத்தை மாவட்டக் கருவூலத்துக்கு அனுப்பினர்.


latest tamil newsஇந்த சம்பவத்தில், நிறைய விஷயங்கள் மறைக்கப்படுவதாக தலைமை தேர்தல் அதிகாரிக்கு தகவல் வந்தது. அவர் உளவுத் துறை போலீசிடம் அறிக்கை கேட்டார். அதில் சம்பவங்கள் வேறு விதமாக சொல்லப்பட்டுள்ளது.

வருவாய் அதிகாரிகளும், போலீஸ் அதிகாரிகளும் முறையாக தகவல் சொல்லவில்லை என, தேர்தல் கமிஷனுக்கு கோபம். கலெக்டர் சிவராசு, ஸ்ரீரங்கம் துணை ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா, காவல் கண்காணிப்பாளர் ராஜன் ஆகியோர் மாற்றப்பட்டனர். புதிய ஆட்சியராக திவ்யதர்ஷினி, காவல் கண்காணிப்பாளராக மயில்வாகனன் நியமிக்கப்பட்டனர்.விவகாரத்தை விசாரித்து அறிக்கை தர கண்காணிப்பாளர் மயில்வாகனன் ஏற்பாடு செய்தார். அதில் தான் புது விஷயங்கள் வெளிப்படுகின்றன.

திருச்சியைச் சேர்ந்த, 'லோக்கல்' அமைச்சர் வீட்டில் இருந்தே, இந்த பணம் எடுத்து வரப்பட்டிருக்கிறது என, விசாரணையில் தெரிய வந்தது. முசிறி, வேட்பாளர் செல்வராஜின் செலவுக்காக அனுப்பப்பட்ட தொகை, 10 கோடி. பணம் எடுத்து சென்ற போது, அமைச்சர் வீட்டில், அ.தி.மு.க.,வின் மீனவர் அணி மாவட்ட அமைப்பாளர் சாமி ரவி இருந்தார். இவர் ரவுடி முத்திரை குத்தப்பட்டவர்.

பணம் ராமமூர்த்தியின் காரில் ஏற்றப்பட்ட விபரத்தை அறிந்து கொண்ட சாமி ரவி, காரில், 10 கோடி செல்லும் தகவலை, நெருக்கமான சிலருக்கு சொல்லியிருக்கிறார். அதை தெரிந்து கொண்ட கும்பல் ஒன்று, காரில் சென்று, ராமமூர்த்திக்கு சொந்தமான காரை பெட்டவாய்த்தலை சுங்கச்சாவடி அருகில் அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் மறித்துள்ளது. அப்போதுதான், இரு தரப்புக்கும் பிரச்னை ஏற்பட்டிருக்கிறது.

பறக்கும் படை வருவதை அறிந்த ரவுடி கும்பல், காரில் இருந்தவர்களிடம், 7 கோடி ரூபாயை பறித்துச் சென்று விட்டனர். காரில் இருந்தவர்கள், பணத்தை மறைக்க அருகில் இருந்த புதரில் 1 கோடி ரூபாயை வீசியுள்ளனர். மீதி, 2 கோடிகளை வீசு முன், போலீஸ் நெருங்கி விட்டது.இரண்டு கோடி ரூபாய் காரில் இருந்து எடுத்த போலீசாரும்; பறக்கும் படையினரும், புதரில் இருந்தும் 1 கோடியை மீட்டு விட்டனர். அதையும் பறக்கும் படை + போலீசுக்குசொல்லவில்லை.

மயில்வாகனன் தனிப்படை விசாரணையில் இது தெரியவந்திருக்கிறது. பணத்தை எடுத்துச் சென்ற, ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சாமி ரவி சொல்லியே ரவுடி கும்பல் காரை மறித்து 7 கோடி ரூபாயைkபறித்து சென்றதும் ஊர்ஜிதம் ஆனது. சாமி ரவி தலைமறைவாகி விட்டார். சிக்கும் போது, அவர் என்ன புதுக் கதை சொல்வாரோ என, போலீசார் திகைப்புடன் காத்திருக்கின்றனர்.

Advertisement
வாசகர் கருத்து (47)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankaranarayanan - Chennai-Tamilnadu,இந்தியா
05-ஏப்-202120:47:56 IST Report Abuse
sankaranarayanan உண்மையில் மோடி மந்திரி சபையில் நிதி மந்திரி ஸ்ரீமதி நிர்மலா சீத்தாராமன் ஓர் அதிர்ஷ்டசாலிதான். அவருடைய நிதி மந்திரி சமயத்திதான் அநேக விதமான ரைடுகள் நடத்தி கள்ளப்பணம் அரசாங்க கஜானாவிற்குள் வந்திருக்கிறது. வந்துகொண்டிருக்கின்றது - ஊழலைகள் ஒழிக்கப்பட்டு, ஊழல்கள் இல்லாத அரசாக அமைந்து, அரசாங்க கஜானா நிரம்பி வழிகிறது. லக்ஷிமிகரமாக உள்ளது மத்திய அமைச்சரகம். ஸீதாலக்ஷ்மி என்றே சொல்லலாம் வருவாயை பெருக்கி, புது புது திட்டங்களை மக்களுக்கு அறிவித்து,அடிமட்ட ஏழை கிழ்த்தர மக்களுக்கு பெரும் உதவிகளை செய்து கொண்டு, இருக்கிறார்கள். இதனால் நாட்டின் பொருளாதாரம் மிகவும் உயர்ந்து காணப்படும் வாழக பாரதம் வாழ்க மத்திய அரசு வாழ்க மோடி அரசாண்மை
Rate this:
Cancel
K E MUKUNDARAJAN - Chennai,இந்தியா
05-ஏப்-202118:57:28 IST Report Abuse
K E MUKUNDARAJAN குட்டை மட்டை கர்மவீரர் . இதுதான் ஞாபகம் வருது.
Rate this:
Cancel
DINAGARAN S - new delhi,இந்தியா
05-ஏப்-202116:04:36 IST Report Abuse
DINAGARAN S டேய் இவ்வளவு பணம் எங்கேயிருந்து வந்தது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X