அரசியல் செய்தி

தமிழ்நாடு

'உனக்குத்தான் சாமி எங்க ஓட்டு'

Added : ஏப் 05, 2021
Share
Advertisement
திருமங்கலம், அ.தி.மு.க., வேட்பாளர் உதயகுமார் கள்ளிக்குடியில் பிரசாரம் செய்தார். வழியில் மேலப்பட்டி அருகே மிளகாய் வற்றல் பதப்படுத்தும் தொழிற்சாலைக்கு சென்றார்.வேலை செய்துகொண்டு இருந்த பெண்களிடம், மிளகாய் வற்றல் குவியலுக்கு நடுவே அமர்ந்து ஓட்டு கேட்டார். மிளகாய் நெடி அதிகமாக இருந்ததால், அமைச்சருக்கும், நிர்வாகிகளுக்கும் தொடர் தும்மல் ஏற்பட்டது.பெண்கள்
election, தேர்தல்

திருமங்கலம், அ.தி.மு.க., வேட்பாளர் உதயகுமார் கள்ளிக்குடியில் பிரசாரம் செய்தார். வழியில் மேலப்பட்டி அருகே மிளகாய் வற்றல் பதப்படுத்தும் தொழிற்சாலைக்கு சென்றார்.

வேலை செய்துகொண்டு இருந்த பெண்களிடம், மிளகாய் வற்றல் குவியலுக்கு நடுவே அமர்ந்து ஓட்டு கேட்டார். மிளகாய் நெடி அதிகமாக இருந்ததால், அமைச்சருக்கும், நிர்வாகிகளுக்கும் தொடர் தும்மல் ஏற்பட்டது.

பெண்கள் கரிசனத்துடன், 'எங்களுக்கு இந்த நெடி பழகிட்டுது; நீங்க இன்னும் கொஞ்ச நேரம் இருந்தா உடம்பு பூரா எரியும்; நாலு எடத்துக்கு போறவுக இங்க நிக்காதீக. உனக்குதான் சாமி எங்க ஓட்டு' என, வாக்குறுதி அளித்து வழியனுப்பினர்.

'இப்டி பதில் வரணும்னா எப்டி கேக்கணும்னு வெவரம் தெரிஞ்சவருப்பா உதயகுமார்' என, இளநீரால் தொண்டையை நனைத்தபடி சொன்னார்கள் ர.ர.,க்கள்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X