அரசியல் செய்தி

தமிழ்நாடு

'பூ'வுக்கு பதிலாக 'இலை' வேட்பாளர் நெகிழ்ச்சி

Added : ஏப் 05, 2021
Share
Advertisement
வேட்பாளர்களுக்கு சந்தன மாலை, மல்லிகைப்பூ மாலை அணிவித்தல், விலை உயர்ந்த சால்வை போர்த்துதல் போன்றவை, நீலகிரியை பொறுத்தவரை பழைய, 'ஸ்டைல்.'கூடலுார் தொகுதியில், அ.தி.மு.க., வேட்பாளர் பொன் ஜெயசீலன், தோட்ட தொழிலாளர்களிடம், ஓட்டு கேட்க சென்ற போது. பசுந்தேயிலையால் கட்டிய மாலையை அணிவித்து, அவரை வரவேற்றனர். தேயிலை தொழிலாளியின் மகனான அவர், இதனால் நெகிழ்ச்சி அடைந்து, மகிழ்ச்சியாக

வேட்பாளர்களுக்கு சந்தன மாலை, மல்லிகைப்பூ மாலை அணிவித்தல், விலை உயர்ந்த சால்வை போர்த்துதல் போன்றவை, நீலகிரியை பொறுத்தவரை பழைய, 'ஸ்டைல்.'கூடலுார் தொகுதியில், அ.தி.மு.க., வேட்பாளர் பொன் ஜெயசீலன், தோட்ட தொழிலாளர்களிடம், ஓட்டு கேட்க சென்ற போது. பசுந்தேயிலையால் கட்டிய மாலையை அணிவித்து, அவரை வரவேற்றனர். தேயிலை தொழிலாளியின் மகனான அவர், இதனால் நெகிழ்ச்சி அடைந்து, மகிழ்ச்சியாக ஏற்றுக் கொள்கிறார்.அ.தி.மு.க., தொண்டர் ஒருவர் கூறுகையில், 'பூ விக்கிற விலைக்கு, இந்த இலை மாலை தான் ரொம்ப சவுகரியம். நம்ம கட்சி சின்னம், 'இரட்டை இலை'யை ஞாபகப்படுத்திய மாதிரியும் ஆச்சு...' என்றார்.வேட்பாளர் தங்களை கவனிக்கவில்லை என்பதை, தேயிலை மாலை அணிவித்து, ஞாபகப்படுத்தினாங்களோ... என்னவோ...!

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X