அரசியல் செய்தி

தமிழ்நாடு

சரியுமா ஓட்டுப்பதிவு? பதற்றத்தில் தி.மு.க.,வேட்பாளர்கள்

Updated : ஏப் 06, 2021 | Added : ஏப் 05, 2021 | கருத்துகள் (93)
Share
Advertisement
'கொரோனா' பரவல் அதிகரித்து வருகிறது. தேர்தல் பிரசாரத்தில் எவ்வித கட்டுப்பாடுகளும் இல்லாமல், மக்கள் கூடியது தான் காரணம் என, அதிகாரிகள் சொல்கின்றனர்.எவ்வளவோ சொல்லியும், பொது மக்களும், அரசியல்வாதிகளும் கண்டு கொள்ளவில்லை. தேர்தல் பிரசாரத்தை பாதிக்கும் வகையில், எந்த நடவடிக்கையும் எடுக்காமல், தேர்தல் கமிஷனும் ஒதுங்கி நின்றதால், அரசால் ஒன்றும் செய்ய முடியவில்லை.

'கொரோனா' பரவல் அதிகரித்து வருகிறது. தேர்தல் பிரசாரத்தில் எவ்வித கட்டுப்பாடுகளும் இல்லாமல், மக்கள் கூடியது தான் காரணம் என, அதிகாரிகள் சொல்கின்றனர்.



latest tamil news



எவ்வளவோ சொல்லியும், பொது மக்களும், அரசியல்வாதிகளும் கண்டு கொள்ளவில்லை. தேர்தல் பிரசாரத்தை பாதிக்கும் வகையில், எந்த நடவடிக்கையும் எடுக்காமல், தேர்தல் கமிஷனும் ஒதுங்கி நின்றதால், அரசால் ஒன்றும் செய்ய முடியவில்லை. எனினும், தேர்தல் முடிந்த உடனே கட்டுப்பாடுகள் விதித்து அமல்படுத்த அரசின் அனைத்து துறைகளும், 'அலெர்ட்' செய்யப்பட்டுள்ளன. அப்படியும் எண்ணிக்கை குறையவில்லை என்றால், முழு அடைப்பு வரையிலும் போகலாம் என்கின்றனர் சுகாதாரத் துறை அதிகாரிகள்.

இதற்கிடையில், வேட்பாளர்கள், தலைவர்கள், தொண்டர்கள் பலருக்கும் கொரோனா தாக்கம் ஏற்பட்டு, அவர்கள் வீட்டில் முடங்கி இருக்கின்றனர். ஓட்டுச்சாவடிக்கு வரும் வாக்காளர்களுக்கு வெப்பப் பரிசோதனை செய்யப்படும். ஓவ்வொருவரும் கட்டாயம் முக கவசம் அணிந்திருக்க வேண்டும்; சமூக இடைவெளியில் வரிசையில் நின்றுதான் ஓட்டளிக்க வேண்டும் என, கமிஷன் அறிவித்துள்ளது. இப்படிப்பட்ட நெருக்கடியான பல காரணங்களால், கடந்த சட்டசபைத் தேர்தலை காட்டிலும் இந்த முறை ஓட்டுப்பதிவு குறைவாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 50 வயதைக் கடந்தவர்கள் கூட, கொரோனா பரவல் அச்சம் காரணமாகவும், வெயில் காரணமாகவும் ஓட்டளிக்க வர மாட்டார்கள் என்ற அச்சம், கட்சிகளுக்கு ஏற்பட்டிருக்கிறது.


latest tamil news


'ஐம்பது வயதை கடந்த வாக்காளர்கள், ஒன்றரை கோடி வரை இருப்பர். அவர்களில் பெரும்பாலானோர், தி.மு.க.,வுக்கு ஓட்டளித்து வந்தவர்கள். அதனால், ஓட்டுப்பதிவு சதவிகிதம் குறையும்போது, அது தி.மு.க.,வுக்குத்தான் பாதிப்பாக அமையும்' என, அக்கட்சி கணக்கிட்டு பதற்றப்படுகிறது. இந்தப் பிரச்னையை எப்படி எதிர்கொள்வது என புரியாமல் தவித்த, தி.மு.க., கடைசி நேரத்தில் ஒரு முடிவுக்கு வந்திருக்கிறது.

ஐம்பது வயதுக்கு மேற்பட்டவர்களை, கொரோனா பாதுகாப்பு முன்னெச்சரிக்கையோடு, வீட்டில் இருந்து ஓட்டுச்சாவடிக்கு அழைத்துச் செல்லும் வேலையை செய்யலாம் என முடிவெடுத்திருக்கிறது.தேர்தல் விதிகளின்படி இது தவறுதான் என்றாலும், அசாதாரணமான பிரச்னைக்கு அசாதாரணமான முடிவு தேவைப்படுவதாக அறிவாலயம் கூறுகிறது.-

Advertisement




வாசகர் கருத்து (93)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
vijay - coimbatore,இந்தியா
05-ஏப்-202123:12:47 IST Report Abuse
vijay ...தவறுதான் என்றாலும்/// தீயமுகவே ஒரு தவறுதான்
Rate this:
Cancel
Devanand Louis - Bangalore,இந்தியா
05-ஏப்-202119:16:11 IST Report Abuse
Devanand Louis சென்னை-கிண்டி மின் உரிமம் வழங்கும் அலுவலகத்தில்( தமிழ் நாடு எலக்ட்ரிகல் லைசென்சிங் போர்டு ) லஞ்சம் வாங்கும் கொடுமையான தொழில், நிர்வாக சீர்கேடு ,தமிழ் நாடு அரசின் சட்டதிட்டங்களுக்கு உட்படாமலிருத்தல்,அதிகாரத்தை துஷ்ப்ரயோகம் -சென்னை-கிண்டி மின் உரிமம் வழங்கும் அலுவலகத்தில் உள்ள அணைத்து ஊழியர்கள் மற்றும் அலுவலர்கள் எல்லோரும் லஞ்சம் வாங்குவதுதான் அவர்களின் தலையாய வேலை, லஞ்சம் கொடுக்காமல் எந்த ஒரு சின்ன வேலை அங்கு நடக்காது, பலவித தில்லுமுல்லு வேலைகளையும் செய்து எல்லா அலுவல் பணிகளுக்கும் லஞ்சம் கேட்கிறார்கள் மேலும் தமிழ் நாடு அரசுக்கு வரும் வருவாயை வரவிடாமல் கெடுக்கிறார்கள். கொரோனாவால் நாடே பாதிப்படைந்துள்ளது ,மக்கள் கொரானாவால் மனநலம் மற்றும் வருவாய் இல்லாத இந்த நேரத்தில் சென்னை-கிண்டி மின்சார உரிமம் வழங்கும் வாரியத்தின் மனித நேயமில்லாத லஞ்சம் வாங்கும் சர்வாதிகாரம் கொண்ட அதிகாரிகள், பொதுமக்கள் எல்லோரும் சென்னை-கிண்டி மின் உரிமம் வழங்கும் அலுவலகத்தில் இந்த கேடுகெட்ட வேலைகளால் மிகவும் கொதிப்படைந்துள்ளார்கள் ஆகையால் விஜிலென்ஸ் ரைடு தேவை சென்னை-கிண்டி மின் உரிமம் வழங்கும் அலுவலகத்திற்கு ,மேலும் அங்குள்ள டெலிபோன் நம்பர்களை 04422500291 & 04422500494 & 04422500036 தொடர்புகொண்டாள் யாரும் வேண்டுமென்றே டெலிபோனை எடுப்பதில்லை. கண்டிப்பாக விஜிலென்ஸ் ரைடு தேவை ,தினமலரின் உதவியும் தேவை
Rate this:
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
05-ஏப்-202119:07:48 IST Report Abuse
Pugazh V 18 முதல் 25 வயதில் உள்ளவர்களில் 40% த்துக்கு வாக்காளர் அட்டையே கிடையாது. இன்னொரு 30% வேறு ஊர்களில் வேலையில். மீதி 30% க்கு அரசியல் பற்றி எதுவுமே தெரியாது. 25 முதல் 35 வயதில் உள்ளவர்களில் 80% அரசியல் பக்கமே வராதவர்கள். 50 வயதுக்கு மேல் உள்ளவர்களில் பலரும் ஓய்வு பெற்று வீட்டில் உட்கார்ந்து வியாக்கியானம் பேசி பாஜக வை ஆதரித்து எழுதுபவர்கள். அவர்கள் வாக்களிக்க வரவும்மாட்டார்கள். அதனால் பதற வேண்டியது பாஜக அதிமுக தான். நீங்கள் வேண்டுமானால் பாருங்கள்...பாஜக அதிமுக கூட்டணி வேட்பாளர் கள் தான் பதற்றப்பட வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X