பொது செய்தி

இந்தியா

ஷூ-வுக்கு பாலீஷ் போடச் சொன்னார்கள் - செலவின பார்வையாளர்கள் மீது புகார்

Updated : ஏப் 05, 2021 | Added : ஏப் 05, 2021 | கருத்துகள் (20)
Share
Advertisement
இடுக்கி: கேரளாவின் இடுக்கி மாவட்டத்திலுள்ள தேவிக்குளம் மற்றும் உடும்பஞ்சோலா தொகுதிகளின் 42 வாக்குப்பதிவு அதிகாரிகள் குழு, மத்திய செலவினப் பார்வையாளர் தங்களை மிகவும் மோசமாக நடத்தியதாகவும், கேரள மொழி, கலாசாரத்தை இழிவுப்படுத்தியதாகவும் புகாரளித்துள்ளனர்.தமிழகத்துடன் சேர்த்து கேரளாவுக்கும் ஏப்ரல் 6-ல் சட்டமன்ற பொதுத் தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில்

இடுக்கி: கேரளாவின் இடுக்கி மாவட்டத்திலுள்ள தேவிக்குளம் மற்றும் உடும்பஞ்சோலா தொகுதிகளின் 42 வாக்குப்பதிவு அதிகாரிகள் குழு, மத்திய செலவினப் பார்வையாளர் தங்களை மிகவும் மோசமாக நடத்தியதாகவும், கேரள மொழி, கலாசாரத்தை இழிவுப்படுத்தியதாகவும் புகாரளித்துள்ளனர்.



latest tamil news



தமிழகத்துடன் சேர்த்து கேரளாவுக்கும் ஏப்ரல் 6-ல் சட்டமன்ற பொதுத் தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில் இடுக்கி மாவட்ட வாக்குப்பதிவு அலுவலர்கள் குழு, மத்திய செலவினப் பார்வையாளர் நரேஷ் குமார் பன்சால் என்பவர் தங்களுக்கு கடுமையான மன உளைச்சலை அளித்ததாக புகார் தெரிவித்துள்ளனர். இரக்கமின்றியும், மிகவும் அருவருக்கத்தக்க வகையிலும் நடந்துக்கொண்டதால் தாங்கள் புகார் அளிக்கும் நிர்பந்தத்திற்கு ஆளானதாகவும் கூறியுள்ளனர்.

மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் அவர்கள் அளித்த புகாரில் கூறியிருப்பதாவது: செலவின பார்வையாளர் பெரும்பாலும் தேர்தல் அதிகாரிகளை தனது ஆர்டர்லிக்களை போலவே நடத்துகிறார். தனது ஷூக்களை பாலிஷ் போடும்படியும், தனக்கு தேவையான பொருட்களை வாங்கி வரும்படியும் உத்தரவிட்டுள்ளார். தேவிக்குளம் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் உயர் பதவியில் உள்ள ஒருவரிடம் கூட்டத்திற்கு நடுவே ஜெல் பேனா வாங்கி வா என கூறினார். அவரது உத்தரவுகளை நிறைவேற்ற தயங்கினால் கடுமையாக துன்புறுத்துவார், மிரட்டுவார்.


latest tamil news


கடந்த சனிக்கிழமை வீடியோ கண்காணிப்பு குழுவுக்கு ஒதுக்கப்பட்ட வாகனத்தை இவர் கைப்பற்றி, தனது குடும்பத்துடன் மதுரைக்கு சுற்றுலா சென்று வந்தார். அதனால் அன்று முழுவதும் வீடியோ அணியினர் நடந்தே தங்களுக்கு கொடுக்கப்பட்ட பணியை முடிக்க வேண்டியதானது. செலவின பார்வையாளர் அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் நாங்கள் தான் செலவு செய்ய வேண்டும் என்றார். விலையுயர்ந்த மசாலாப் பொருட்களிலிருந்து, தேங்காய் வரை எங்கள் கை காசை செலவழித்து வாங்கி தர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. கேரளாவின் மொழியையும் கலாச்சாரத்தையும் அவமதித்து வருகிறார். என அடுக்கடுக்காக குற்றஞ்சாட்டியுள்ளனர்.


Advertisement




வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
வரிசெலுத்தும் மூடன் இன்று தேர்தல் ஆணைய ஊழியர் மீது புகார் அளித்துள்ள மாநில அரசு ஊழியர்கள், உரிய சேவைகள் பெற தங்களை நாடிவரும் பொதுமக்களை என்ன பாடுபடுத்தியிருப்பார்கள்?தன் விணை, தன்னை சுடும்.
Rate this:
Cancel
தமிழ்வேள் - THIRUVALLUR,இந்தியா
05-ஏப்-202116:04:28 IST Report Abuse
தமிழ்வேள் ஒரு பொதுவான கருத்து ....தேர்தல் பார்வையாளர்கள் தொகுதிக்கு வருவது பணிநிமித்தமே ...அரசு பணியில் அரசு செலவில் ..அவர்களுக்கு பணிக்கு செல்லும்போது குடும்பத்தை அழைத்துக்கொண்டு ஊர் சுற்றிப்பார்க்க எந்த விதி அனுமதி தருகிறது? தனியே வந்தாலும் தொகுதியை விட்டு வெளியேபோக அனுமதி கிடையாது ..அப்படி இருக்க கும்மிடி பூண்டி தொகுதி தேர்தல் பாரவையாளர் எந்த அடிப்படையில் யாருடைய அனுமதியில் பேரில் யாருடைய செலவில் கொடைக்கானலுக்கும் ஊட்டிக்கு செல்கிறார் ? இது பணிவிதிமீறல் ஆகாதா ? பிறகு இதற்கான செலவை எந்த அரசு அலுவலர் ஏற்பார் ..அரசு அனுமதிக்காது என்னும்போது வேட்பாளர் கட்சி இடம் கையேந்த வேண்டும் ..பிறகு எப்படி தேர்தல் நேர்மையாக நடக்கும் ...இந்த தவறுகளை தேர்தல் கமிஷன் திருத்தவில்லை என்றால் , தேர்தல் தவறுகள் பெரும் அளவில்தான் இருக்கும் ....சிறு தவறு பெரும் பிறழ்வுக்கு வழி வகுக்கும் ......
Rate this:
Cancel
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
05-ஏப்-202113:03:20 IST Report Abuse
தமிழவேல் இவனுவோளுக்கு, இங்க முட்டு குடுக்கிறதுக்கும் ஆளுங்க இருக்கு பாரு..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X