அடிப்படை வசதிகள் செய்து தருவேன் பா.ஜ., சாய்சரவணன்குமார் பேச்சு | Dinamalar

அடிப்படை வசதிகள் செய்து தருவேன் பா.ஜ., சாய்சரவணன்குமார் பேச்சு

Added : ஏப் 05, 2021
Share
வில்லியனுார் : ஊசுடு தொகுதி பா.ஜ., வேட்பாளர் சாய்சரவணன்குமார் தொகுதியில் பல்வேறு பகுதியில் கூட்டணி கட்சியினருடன் சென்று ஓட்டு சேகரித்தார். என்.ஆர்.காங்., கூட்டணியில் பா.ஜ., வேட்பாளராக போட்டியிடும் சாய்சரவணன்குமார் தொகுதியில் இறுதிகட்ட பிரசாரத்தில் ஈடுபட்டார். சேதராப்பட்டு, தொண்டமாநத்தம், பிள்ளையார்குப்பம், கூடப்பாக்கம், பொறையூர், குருமாம்பேட் தொகுதியில் பல்வேறு

வில்லியனுார் : ஊசுடு தொகுதி பா.ஜ., வேட்பாளர் சாய்சரவணன்குமார் தொகுதியில் பல்வேறு பகுதியில் கூட்டணி கட்சியினருடன் சென்று ஓட்டு சேகரித்தார்.

என்.ஆர்.காங்., கூட்டணியில் பா.ஜ., வேட்பாளராக போட்டியிடும் சாய்சரவணன்குமார் தொகுதியில் இறுதிகட்ட பிரசாரத்தில் ஈடுபட்டார். சேதராப்பட்டு, தொண்டமாநத்தம், பிள்ளையார்குப்பம், கூடப்பாக்கம், பொறையூர், குருமாம்பேட் தொகுதியில் பல்வேறு இடங்களுக்கு கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் வீடு வீடாக சென்று ஓட்டு சேகரித்தார்.அப்போது அவர் பேசுகையில், வெற்றிபெற்றால் தொகுதியில் தரமான சாலைகள், சுத்திகரிக்கப் பட்ட குடிநீர், தெரு மின் விளக்குகள் உள்பட அனைத்து அடிப்படை வசதிகளையும் தீர்த்து வைப்பேன். மேலும் படித்த இளைஞர்களுக்கு அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலை பெற்றுத் தருவேன் என்றார். என்.ஆர்.காங்., தொகுதி தலைவர் ராமநாதன், பா.ஜ., நிர்வாகிகள் புருேஷாத்தம்மன் உட்பட பலர்பங்கேற்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X