காரைக்கால் : புதுச்சேரியில் கடந்த 5 ஆண்டுகளாக காங்., ஊழல் ஆட்சி செய்துள்ளனர் என பா.ஜ.,தேசிய தலைவர் நட்டா பேசினார்.
காரைக்கால் மாவட்டம், திருநள்ளாறு பா.ஜ., வேட்பாளர் ராஜசேகரனை ஆதரித்து அக்கட்சி தலைவர் நட்டா பிரசாரம் செய்தார். புதுச்சேரியிலிருந்து தனி ஹெலிகாப்டரில் காலை 12.20 மணிக்கு வரிச்சிக்குடி பாலிடெக்னிக் கல்லுாரிக்கு வந்தவரை மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால், மாவட்ட தலைவர் துரைசோனதிபதி வரவேற்றனர்.திருநள்ளாறு கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகத்திலிருந்து வேனில் பிரசாரம் செய்தார். பின், திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவிலில் தரிசனம் செய்தார். மதியம் 1.30 மணிக்கு சென்னை புறப்பட்டுச் சென்றார்.பிரசாரத்தில் நட்டா பேசியதாவது: கடந்த 5 ஆண்டுகளில் நாராயணசாமி ஊழல் ஆட்சி நடத்தியுள்ளார்.
பல தொழிற்சாலைகளை மூடியதால் இளைஞர்கள் வேலை இழந்துள்ளனர். மக்கள் நலத் திட்டங்கள் எதையும் காங்.,அரசு செய்யவில்லை.மத்திய அரசு மூலம் காரைக்காலுக்கு ஜிப்மர் மருந்துமனை கொண்டு வரப்பட்டது. ஆனால் காங்.,ஆட்சியில் மருந்துமனை கட்டுவதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தமிழக மற்றும் புதுச்சேரி மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சுடப்பட்ட நிலையில் மோடி ஆட்சியில் மீனவர்கள் பாதுகாப்பாக உள்ளார். மக்கள் மீது அக்கரையுள்ள மத்திய அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. எனவே பா.ஜ.,வேட்பாளரை ஆதரித்து மக்கள் ஓட்டளிக்க வேண்டும். தாமரை மலரட்டும். இவ்வாறு அவர் பேசினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE