அரசியல் செய்தி

தமிழ்நாடு

'என் எம்.எல்.ஏ., சம்பளம் மாணவர்களின் நலனுக்கே'

Added : ஏப் 05, 2021
Share
Advertisement
வாலாஜாபாத் : ''உத்திரமேரூர் தொகுதியில், எம்.எல்.ஏ.,வாக வந்தால், என் சம்பளம், மாணவர்களின் நலனுக்காக செலவிடுவேன்,'' என, அ.ம.மு.க., வேட்பாளர் ரஞ்சித்குமார், ஏரிவாய் கிராமத்தில் பேசினார். உத்திரமேரூர் சட்டசபை தொகுதிக்கு, அ.ம.மு.க., வேட்பாளராக முத்தியால்பேட்டை ஆர்.வி.ரஞ்சித்குமார் போட்டியிடுகிறார். இத்தொகுதி, ஏரிவாய் கிராமத்தில், ஓட்டு சேகரித்து, அவர்

வாலாஜாபாத் : ''உத்திரமேரூர் தொகுதியில், எம்.எல்.ஏ.,வாக வந்தால், என் சம்பளம், மாணவர்களின் நலனுக்காக செலவிடுவேன்,'' என, அ.ம.மு.க., வேட்பாளர் ரஞ்சித்குமார், ஏரிவாய் கிராமத்தில் பேசினார்.

உத்திரமேரூர் சட்டசபை தொகுதிக்கு, அ.ம.மு.க., வேட்பாளராக முத்தியால்பேட்டை ஆர்.வி.ரஞ்சித்குமார் போட்டியிடுகிறார். இத்தொகுதி, ஏரிவாய் கிராமத்தில், ஓட்டு சேகரித்து, அவர் பேசியதாவது:அ.தி.மு.க.,வினர் செய்த துரோகத்தால், குக்கர் சின்னத்தில் போட்டியிடுகிறேன். மற்ற கட்சியினர் எம்.எல்.ஏ.,வாக வந்தால், 'கமிஷன்' பெற்று தான், வேலை செய்வர். தேர்தல் செலவுக்கு, சிலர் இப்போதே அட்வான்ஸ் வாங்கிவிட்டனர். நான் அவ்வாறு இல்லை. ஒரு ரூபாய் கூட கமிஷன் பெறாமல், தரமான வளர்ச்சி பணிகளை செய்வேன்.என் சம்பளத்தை, தொகுதி மாணவர்களின் நலனுக்கு செலவிடுவேன்.

தரமான சாலைகள், சுத்தமான குடிநீர் வினியோகம் உள்ளிட்ட பல வித அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பேன்.உத்திரமேரூர் தொகுதிக்கு, யார் எம்.எல்.ஏ.,வாக வர வேண்டும் என, மக்களாகிய நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X