பொது செய்தி

இந்தியா

வேலைவாய்ப்பிற்கு வயது விதிவிலக்கு

Added : ஏப் 05, 2021
Share
Advertisement
புதுச்சேரி : ரங்கசாமி முதல்வராக இருந்த போது அவருடைய கட்சியினர் கவர்னரை முற்றுகையிட்டதை மறந்து முன்னுக்கு பின் முரணாக பேசுகிறார் என முன்னாள் முதல்வர் நாராயணசாமி கூறினார். அவர் அளித்த பேட்டி:பா.ஜ., வேட்பாளர்களை வெற்றி பெற செய்ய அனைத்து முயற்சிகளையும் செய்கின்றனர். தேர்தல் துறை தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்களுடைய ஆட்சியில் எந்தந்த திட்டங்களை கவர்னர், மத்திய
 வேலைவாய்ப்பிற்கு வயது விதிவிலக்கு

புதுச்சேரி : ரங்கசாமி முதல்வராக இருந்த போது அவருடைய கட்சியினர் கவர்னரை முற்றுகையிட்டதை மறந்து முன்னுக்கு பின் முரணாக பேசுகிறார் என முன்னாள் முதல்வர் நாராயணசாமி கூறினார்.

அவர் அளித்த பேட்டி:பா.ஜ., வேட்பாளர்களை வெற்றி பெற செய்ய அனைத்து முயற்சிகளையும் செய்கின்றனர். தேர்தல் துறை தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்களுடைய ஆட்சியில் எந்தந்த திட்டங்களை கவர்னர், மத்திய அரசு தடுத்தது, செயல்படுத்த முடியவில்லை என பிரித்து கொடுத்துள்ளோம். கடந்த ஐந்து ஆண்டுகள் புதுச்சேரி மக்களின் பிரச்னைகளை பற்றி வாய்திறக்காத எதிர்கட்சி தலைவர் ரங்கசாமி, இப்போது தேர்தல் நேரத்தில் வந்து காங்.,கட்சியை குறை கூறுகிறார்.கடந்த 2014 ம் ஆண்டு முதல் 2016 ம் ஆண்டு வரை மத்தியில் உள்ள பா.ஜ., அரசுக்கு ரங்கசாமி ஆதரவு கொடுத்து மாநில அந்தஸ்து, மாநில கடன் தள்ளுபடி கேட்டார். எதுவும் தரவில்லை.

கவர்னரை எதிர்த்து தெருவில் இறங்கி போராடினோம் என்று ரங்கசாமி கூறுகிறார். அப்படி போராடியதால் திட்டங்களை நிறைவேற்றி இருக்கிறோம். ரங்கசாமி முதல்வராக இருந்தபோது அவருடைய கட்சியினர் கவர்னரை முற்றுகையிட்டதை மறந்து முன்னுக்கு பின் முரணாக பேசுகிறார். கடந்த காலங்களில் நிறைய பதவிகளை நிரம்பியுள்ளோம். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் வயது வரம்பில் ஐந்தாண்டு காலம் இளைஞர்களுக்கு விதிவிலக்கு அளித்து வேலை வாய்ப்பு தருவோம். பா.ஜ.,மக்கள் விரோத நடவடிக்கை,அதிகாரத்தை பயன்படுத்தி, மாநில வளர்ச்சிக்கு குந்தகம் விளைப்பதை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.இவ்வாறு அவர் கூறினார். காங்.,மேலிட பார்வையாளர் சஞ்சய் தத், வைத்திலிங்கம் எம்.பி., அகில இந்திய காங்., ஒருங்கிணைப்பாளருமார் தேவதாஸ் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X