தாய் இறந்த துக்கம் தாளாமல் மகள் மரணம்

Updated : ஏப் 06, 2021 | Added : ஏப் 05, 2021
Share
Advertisement
புதுச்சேரி : தாய் இறந்த துக்கம் தாளாமல் தொடர்ந்து அழுது கொண்டு இருந்த அதேநாளில் மகளும் இறந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நெல்லித்தோப்பு செங்கேணியம்மன் கோயில் வீதியை சேர்ந்தவர் முகமது சையத், 30; குவைத் நாட்டில் வேலை செய்கிறார். இவரது மனைவி பர்ஜானாபேகம், 27; இவரின் தந்தை அப்துல் மத்தீன், 64; தாய் அமினா பீ, 60; புதுச்சேரி விவேகானந்தர் நகர் முதல் குறுக்கு

புதுச்சேரி : தாய் இறந்த துக்கம் தாளாமல் தொடர்ந்து அழுது கொண்டு இருந்த அதேநாளில் மகளும் இறந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லித்தோப்பு செங்கேணியம்மன் கோயில் வீதியை சேர்ந்தவர் முகமது சையத், 30; குவைத் நாட்டில் வேலை செய்கிறார். இவரது மனைவி பர்ஜானாபேகம், 27; இவரின் தந்தை அப்துல் மத்தீன், 64; தாய் அமினா பீ, 60; புதுச்சேரி விவேகானந்தர் நகர் முதல் குறுக்கு தெருவில் வாடகை வீட்டில் வசித்து வந்தனர்.உடல் நலக்குறைவால் பிம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பர்ஜானாபேகத்தின் தாயார் அமினா பீ நேற்று முன்தினம் நள்ளிரவு 12.30 மணியளவில் இறந்தார். உடனடியாக தாயின் வீட்டிற்கு வந்த பர்ஜானாபேகம் துக்கம் தாளாமல் தொடர்ந்து அழுது கொண்டே இருந்தார். உறவினர்கள் அவரை சமாதானம் செய்தும் நிறுத்தவில்லை.

அப்போது பரிஜனா பேகத்திற்கு நெஞ்சுவலி ஏற்பட்டு மயங்கி கீழே விழுந்தார். அவரை அங்கிருந்தவர்கள் அரசு பொது மருத்துவமனைக்கு துாக்கிச் சென்றனர். அவரை பரிசோதனை செய்த டாக்டர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார். புகாரில் பேரில் ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர். தாய் இறந்த நாளில் மகளும் இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X