காஞ்சிபுரம் : சட்டசபை தேர்தல் நாளை நடைபெற உள்ள நிலையில், தேர்தலுக்கான அனைத்து வகையான பணிகளையும் முடித்து, காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம், தேர்தலுக்கு தயார் நிலையில் உள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில், காஞ்சிபுரம், உத்திரமேரூர், ஸ்ரீபெரும்புதுார், ஆலந்துார் என, நான்கு சட்டசபை தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளில், தேர்தல் அறிவிப்பதற்கு முன்பாகவே, அதிகாரிகள் இடமாற்றம், ஓட்டுச்சாவடிகளில் அடிப்படை வசதி உள்ளிட்ட முன்னேற்பாடுகள் செய்யப்பட்டன.தேர்தல் அறிவித்த, பிப்., 26 முதல், தேர்தல் நடத்தை விதிகள் அமலானது. அன்றைய தினம் முதலே, மாவட்டம் முழுவதும் தேர்தல் பணிகள் சூடுபிடித்தன. அன்றாடம் ஆய்வு கூட்டம், விழிப்புணர்வு பிரசாரம், அதிகாரிகள் நியமனம், பறக்கும் படையினர் ரோந்து பணி, அரசியல் கட்சியினர் செயல்பாடுகள் கண்காணிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகள் தொடர்ந்தன.அரசியல் கட்சியினரின் செயல்களில் உள்ள விதிமீறல்களை ஆராய்ந்து, நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு வருகிறது.
ஒவ்வொரு சட்டசபை தொகுதியில் சின்னம் பொருத்தப்பட்டு தயார் நிலையில் உள்ள மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களை, மண்டல அதிகாரிகள், ஓட்டுச்சாவடிக்கு எவ்வாறு கொண்டு செல்ல வேண்டும் என்பதை, வழிகாட்டி படத்துடன், விதிமுறைகள் அறிவுறுத்தப் பட்டுள்ளது.தேர்தல் பணியில் ஈடுபடும், 9,000 அரசு ஊழியர்களுக்கு, மூன்று கட்ட பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன. தேர்தல் முடிந்தவுடன், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களை பாதுகாக்க, காஞ்சிபுரம் அடுத்த பொன்னேரிக்கரையில் உள்ள, அண்ணா பொறியியல் கல்லுாரியும் தேர்வு செய்யப்பட்டுள்ளது.ஒவ்வொரு சட்டசபை தொகுதியிலும், துணை கலெக்டர் தலைமையில், தேர்தல் நடத்தும் அதிகாரிகள், தேர்தல் பணிகளை கவனித்து வருகின்றனர்.
சின்னம் பொருத்தம் பணி பெரும்பாலும் முடிவடைந்த நிலையில், ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் தயாராக உள்ளன.பார்வையற்ற மாற்றுத்திறனாளி ஓட்டளிக்க, உடன் ஒருவர் அனுமதிக்கப் படுவர். பிற மாற்றுத்திறனாளிகள் ஓட்டளிக்க, வீல்சேர்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மொத்தத்தில், தேர்தல் நடத்த, மாவட்ட நிர்வாகம் தயார் நிலையில் உள்ளது.காஞ்சிபுரம் மாவட்டத்தில்வாக்காளர்கள், சாவடிகள் விபரம்மொத்த வாக்காளர்கள் - 13,13,714ஆண்கள் - 6,40,157பெண்கள் - 6,7,3410திருநங்கைகள் - 147--மொத்த ஓட்டுச்சாவடி - 1,872பெண்கள் ஓட்டுச்சாவடி - 4பதற்றமான ஓட்டுச்சாவடி - 245--கட்டுப்பாட்டு இயந்திரம் - 1,872ஓட்டுப்பதிவு இயந்திரம் - 2,796ஒப்புகை சீட்டு இயந்திரம் - 1,872--மொத்த வேட்பாளர்கள் - 75ஓட்டு எண்ணும் மையம் - 1காஞ்சிபுரம் மாவட்டத்தில்வாக்காளர்கள், சாவடிகள் விபரம்மொத்த வாக்காளர்கள் - 13,13,714ஆண்கள் - 6,40,157பெண்கள் - 6,7,3410திருநங்கைகள் - 147--மொத்த ஓட்டுச்சாவடி - 1,872பெண்கள் ஓட்டுச்சாவடி - 4பதற்றமான ஓட்டுச்சாவடி - 245--கட்டுப்பாட்டு இயந்திரம் - 1,872ஓட்டுப்பதிவு இயந்திரம் - 2,796ஒப்புகை சீட்டு இயந்திரம் - 1,872--மொத்த வேட்பாளர்கள் - 75ஓட்டு எண்ணும் மையம் - 1
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE