பொது செய்தி

இந்தியா

மாற்றத்திற்காக மக்கள் ஓட்டளிக்க வேண்டும்

Added : ஏப் 05, 2021
Share
Advertisement
புதுச்சேரி : 'மாற்றத்திற்காகவும், பா.ஜ., கூட்டணி அரசு அமையவும் புதுச்சேரி மக்கள் தவறாமல் ஓட்டளிக்க வேண்டும்' என, பா.ஜ., தலைவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர். மாநில பா.ஜ., தலைவர் சாமிநாதன், மேலிட பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா, ராஜீவ்சந்திர சேகர் எம்.பி., ஆகியோர் அளித்த பேட்டி:மாற்றத்திற்காகவும், பா.ஜ., கூட்டணி அரசு அமையவும் புதுச்சேரி மக்கள் தவறாமல் ஓட்டளிக்க வேண்டும்.

புதுச்சேரி : 'மாற்றத்திற்காகவும், பா.ஜ., கூட்டணி அரசு அமையவும் புதுச்சேரி மக்கள் தவறாமல் ஓட்டளிக்க வேண்டும்' என, பா.ஜ., தலைவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

மாநில பா.ஜ., தலைவர் சாமிநாதன், மேலிட பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா, ராஜீவ்சந்திர சேகர் எம்.பி., ஆகியோர் அளித்த பேட்டி:மாற்றத்திற்காகவும், பா.ஜ., கூட்டணி அரசு அமையவும் புதுச்சேரி மக்கள் தவறாமல் ஓட்டளிக்க வேண்டும். காங்., - தி.மு.க.,வுக்கு பாடம் புகட்ட வேண்டும்.ஊழல் மற்றும் குடும்ப அரசியலை நிராகரிப்பதன் மூலமாக வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கான புதிய அத்தியாயம் துவங்கும்.அதே நேரத்தில், ஒவ்வொரு ஓட்டும் 'பெஸ்ட் புதுச்சேரி'யை நோக்கியதாக இருக்க வேண்டும்.பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பா.ஜ., தேசிய தலைவர் நட்டா ஆகியோர் தலா இரண்டு முறை புதுச்சேரிக்கு வந்துள்ளனர். மத்திய அமைச்சர்கள் பலரும் பிரசாரத்திற்கு வந்து பிரதமரின் விருப்பமான 'பெஸ்ட் புதுச்சேரி'யை உருவாக்க ஆதரவு அளித்துள்ளனர்.

காங்., கட்சியின் எந்த ஒரு தலைவரும் ஒருமுறை கூட புதுச்சேரிக்கு வரவில்லை.ஸ்டாலின் புதுச்சேரிக்கு வந்து அவசரமாக பேச்சை முடித்து சென்று விட்டார். இதில் இருந்தே புதுச்சேரியின் எதிர்காலத்தில் யார் அதிக அக்கறை கொண்டுள்ளனர் என தெரியும்.எங்கள் தேர்தல் அறிக்கையில், 2.5 லட்சம் வேலைகள், தொழில்கள் புத்துயிர் பெறுதல், அரசு காலியிடங்களை நிரப்புதல், அரசு வேலைகளில் பெண்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு, ஒவ்வொரு பெண் மற்றும் சிறுமிகளுக்கும் இலவச சுகாதாரம் மற்றும் கல்வி, மீனவர்களுக்கு நீல புரட்சி, எஸ்.சி., எஸ்.டி., மக்களுக்கான வீடுகள் அறிவித்துள்ளோம்.'பெஸ்ட் புதுச்சேரி' மற்றும் காங்., இல்லாத புதுச்சேரி என்பதில் உறுதியாக உள்ளோம்.

காங்., - தி.மு.க., அரசு பட்டியலின மக்களுக்கு துரோகம் செய்திருக்கிறது. தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஒதுக்கிய நிதியில் உயர் மின்கோபுரம் அமைப்பதில் ஊழல் நடந்துள்ளது. அந்த சமுதாய மக்களுக்கு வீடு கட்ட ரூ. 5 லட்சம் நிதி உயர்த்துவதாக அறிவித்து, பின் நிதி இல்லை என்று காரணத்தைக் கூறி அத்திட்டத்தை செயல்படுத்த தவறிவிட்டது.தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஒதுக்கிய நிதியை பொது பயன்பாட்டிற்கு பயன்படுத்தி, அவர்களுக்கு செய்ய வேண்டிய பணிகளுக்கு நிதி இல்லை என கூறி துரோகத்தை செய்து விட்டு, பா.ஜ., தாழ்த்தப் பட்ட மக்களின் எதிரி என்று நாராயணசாமி பொய் கூறுகிறார். சட்டசபை தேர்தலில் தாமரை, ஜக்கு மற்றும் இரட்டை இலைக்கு ஓட்டளிக்க வேண்டும் என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X