பொது செய்தி

தமிழ்நாடு

ஓட்டு எண்ணும் மையத்திற்கு தடுப்பு அமைக்கும் பணி தீவிரம்

Added : ஏப் 05, 2021
Share
Advertisement
வாலாஜாபாத் : காஞ்சிபுரம் மாவட்டத்தில், ஓட்டு எண்ணும் மையத்திற்கு, தடுப்பு கட்டைகள் அமைக்கும் பணி விறுவிறுப்பாக நடக்கிறது. சட்டசபை தேர்தல், நாளை நடக்கிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தில், காஞ்சிபுரம், உத்திரமேரூர், ஸ்ரீபெரும்புதுார், ஆலந்துார் ஆகிய, நான்கு சட்டசபை தொகுதிகளில், 1,872 ஓட்டுச்சாவடிகளில், வாக்காளர்கள் ஓட்டளிக்கின்றனர்.சாவடிகளில் வைக்கப்படும், 4,000க்கும்

வாலாஜாபாத் : காஞ்சிபுரம் மாவட்டத்தில், ஓட்டு எண்ணும் மையத்திற்கு, தடுப்பு கட்டைகள் அமைக்கும் பணி விறுவிறுப்பாக நடக்கிறது.

சட்டசபை தேர்தல், நாளை நடக்கிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தில், காஞ்சிபுரம், உத்திரமேரூர், ஸ்ரீபெரும்புதுார், ஆலந்துார் ஆகிய, நான்கு சட்டசபை தொகுதிகளில், 1,872 ஓட்டுச்சாவடிகளில், வாக்காளர்கள் ஓட்டளிக்கின்றனர்.சாவடிகளில் வைக்கப்படும், 4,000க்கும் மேற்பட்ட மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், ஓட்டளிப்புக்கு பின், காஞ்சிபுரம் அடுத்த, பொன்னேரிக்கரை அண்ணா பொறியியல் உறுப்பு கல்லுாரியில், பாதுகாப்பாக வைக்கப்பட உள்ளன. இதற்கு, பல அடுக்கு பாதுகாப்பும் போடப்பட உள்ளது.

மே-, 2ம் தேதி, ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் போது, அரசியல் கட்சி வாகனங்கள் மற்றும் கட்சி தொண்டர்கள் அதிகம் வருவர். அவர்களை தடுத்து நிறுத்தும் வகையில், தற்போதே, தடுப்பு கட்டை அமைக்கும் பணி நடந்து வருகிறது. அண்ணா உறுப்பு பொறியியல் கல்லுாரி வளாகம் முழுதும் சுற்றுச்சுவர் வசதி இருந்தாலும், தடுப்பு கட்டை அமைக்கும் பணியும் நடந்து வருகிறது.இது தவிர, கல்லுாரி வளாகம் மற்றும் வெளி பகுதிகளில், இருளை அகற்றும் விதமாக, அதிக திறன் உடைய மின் விளக்குகள் பொருத்தும் பணியும் நடந்து வருகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X