அவதுாறு பிரசாரம் 7 பேர் மீது வழக்கு

Added : ஏப் 05, 2021
Share
Advertisement
புதுச்சேரி : உருளையன்பேட்டை தி.மு.க.,வேட்பாளர் கோபால் குறித்து அவதுாறு பிரசாரம் செய்த ஏழு பேர் மீது போலீசார் வழக்கு பதிந்தனர். உருளையன்பேட்டை தொகுதியின் பல்வேறு இடங்களில் தி.மு.க.,வேட்பாளர் கோபாலை பற்றி அவதுாறாக வந்த செய்தியை குறிப்பிட்டு நோட்டீஸ் ஒட்டப்பட்டிருந்தது. அத்துடன் அவதுாறு செய்தி வாட்ஸ் ஆப் குழுக்களில் பகிரப்பட்டது. தி.மு.க., தொகுதி செயலாளர் சக்திவேல்

புதுச்சேரி : உருளையன்பேட்டை தி.மு.க.,வேட்பாளர் கோபால் குறித்து அவதுாறு பிரசாரம் செய்த ஏழு பேர் மீது போலீசார் வழக்கு பதிந்தனர்.

உருளையன்பேட்டை தொகுதியின் பல்வேறு இடங்களில் தி.மு.க.,வேட்பாளர் கோபாலை பற்றி அவதுாறாக வந்த செய்தியை குறிப்பிட்டு நோட்டீஸ் ஒட்டப்பட்டிருந்தது. அத்துடன் அவதுாறு செய்தி வாட்ஸ் ஆப் குழுக்களில் பகிரப்பட்டது. தி.மு.க., தொகுதி செயலாளர் சக்திவேல் கொடுத்த புகாரில், உருளையன்பேட்டை தொகுதியில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர் நேரு ஆதரவாளர்கள் அவதுாறு பிரசாரம் செய்துள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கூறியிருந்தார். இது தொடர்பாக உருளையன்பேட்டையை சேர்ந்த மகேஷ், சூர்யா, ரஞ்சித், சுரேஷ், கந்தசாமி, செழியன், ஜோசப் உட்பட 7 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X