புதுச்சேரி : முத்தியால்பேட்டையில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்த 3 பேர் கைது செய்யப்பட்டு, ரூ. 2.56 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
முத்தியால்பேட்டை தொகுதி, வ.உ.சி., நகர், அன்னிபெசன்ட் வீதியில், தேர்தல் பறக்கும் படை அதிகாரி செல்வக்குமார் தலைமையிலான குழுவினர் கண்காணிப்பல் ஈடுபட்டனர். அங்கு, நின்றிருந்த, லாஸ்பேட்டை பாரதி நகர் பாலாஜி, 37; என்பவரை விசாரித்தபோது, அவரிடம் ரூ. 26,700 இருந்தது. அவரை பணத்துடன் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். தேர்தல் பறக்கும்படை அதிகாரி ராஜேந்திரன் தலைமையிலான குழுவினர், முத்தியால்பேட்டை மார்க்கெட் அருகே நேற்று முன்தினம் இரவு 1:00 மணிக்கு, வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, PY.01.BV.5333 என்ற காரை நிறுத்தி சோதனை செய்தனர்.
டிரைவர் பாக்கெட்டில் ரூ. 2.20 லட்சம் இருந்தது. காரில் அன்பளிப்பு கவர்கள், புடவை, வேட்டி இருந்தது. கார் மற்றும் பணத்தை பறிமுதல் செய்து, முத்தியால்பேட்டை போலீசில் ஒப்படைத்தனர். முத்தியால்பேட்டை திருவள்ளுவர் நகரில், பணம் வினியோகம் செய்வதாக வந்த புகாரின் பேரில் குமார் தலைமையிலான தேர்தல் பறக்கும்படையினர் நேற்று முன்தினம் இரவு ஆய்வு செய்தனர். அங்கு நின்றிருந்தவரை விசாரித்தபோது, திருவள்ளுவர் நகர், செட்டிக்குளம் வீதி ஏழுமலை என்பதும் வாக்காளர்களுக்கு வினியோகம் செய்ய ரூ. 9990 வைத்திருந்தது தெரிந்தது. பணத்தை பறிமுதல் செய்து, முத்தியால்பேட்டை போலீசில் ஒப்படைத்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE