சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஊழியர் வெட்டி கொலை

Added : ஏப் 05, 2021
Share
Advertisement
கூடுவாஞ்சேரி : கூடுவாஞ்சேரி அருகே, தனியார் நிறுவன ஊழியர், வெட்டிக் கொலை செய்யப்பட்டார். காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதுார் தாலுகா, வரதராஜபுரம் பகுதியைச் சேர்ந்த சின்னதம்பி மகன் நாராயணன், 39. இவர், சென்னையில், தனியார் நிறுவனத்தில், டெக்னீசியனாக பணிபுரிந்து வந்தார்.இந்நிலையில், முகம், கைகள் வெட்டப்பட்ட நிலையில், கூடுவாஞ்சேரி -- தைலாவரம் இடையே, ரயில்வே இருப்பு

கூடுவாஞ்சேரி : கூடுவாஞ்சேரி அருகே, தனியார் நிறுவன ஊழியர், வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதுார் தாலுகா, வரதராஜபுரம் பகுதியைச் சேர்ந்த சின்னதம்பி மகன் நாராயணன், 39. இவர், சென்னையில், தனியார் நிறுவனத்தில், டெக்னீசியனாக பணிபுரிந்து வந்தார்.இந்நிலையில், முகம், கைகள் வெட்டப்பட்ட நிலையில், கூடுவாஞ்சேரி -- தைலாவரம் இடையே, ரயில்வே இருப்பு பாதையில், நாராயணன் இறந்து கிடந்தார். தகவலறிந்து, கூடுவாஞ்சேரி போலீசார் மற்றும் தாம்பரம் ரயில்வே போலீசார், சம்பவ இடத்திற்கு வந்தனர். இருப்பு பாதை என்பதால், ரயில்வே போலீசார், சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக, செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இக்கொலை குறித்து, தீவிரமாக விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X