மயங்கி விழுந்த கர்ப்பிணி பரிதாப சாவு| Dinamalar

மயங்கி விழுந்த கர்ப்பிணி பரிதாப சாவு

Added : ஏப் 05, 2021
Share
புதுச்சேரி : வீட்டில் மயங்கி விழுந்த எட்டு மாத கர்ப்பிணி இறந்தார். புதுச்சேரி எல்லைப்பிள்ளைச்சாவடி மணக்குள விநாயகர் நகர், 2வது குறுக்கு தெருவைச் சேர்ந்தவர் ஜெயக்குமார் 43; சேதராப்பட்டு தனியார் கம்பெனியில் பணிபுரிகிறார். இவரது மனைவி மலர்விழி, 30 ; மகன் பிரனேஷ். 6. மலர்விழி மீண்டும் 8 மாத கர்ப்பிணியாக இருந்தார். உடல் நிலை சரியில்லாமல் ராஜிவ்காந்தி மகளிர் மருத்துவமனையில்

புதுச்சேரி : வீட்டில் மயங்கி விழுந்த எட்டு மாத கர்ப்பிணி இறந்தார்.

புதுச்சேரி எல்லைப்பிள்ளைச்சாவடி மணக்குள விநாயகர் நகர், 2வது குறுக்கு தெருவைச் சேர்ந்தவர் ஜெயக்குமார் 43; சேதராப்பட்டு தனியார் கம்பெனியில் பணிபுரிகிறார். இவரது மனைவி மலர்விழி, 30 ; மகன் பிரனேஷ். 6. மலர்விழி மீண்டும் 8 மாத கர்ப்பிணியாக இருந்தார். உடல் நிலை சரியில்லாமல் ராஜிவ்காந்தி மகளிர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு 3ம் தேதி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். நேற்று வீட்டில் கழிவறைக்கு சென்ற போது திடீரென மயங்கி விழுந்தார். மீண்டும் ராஜிவ் காந்தி மகப்பேறு மருத்துவமனைக்கு துாக்கிச் சென்றனர். பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின் றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X