பொது செய்தி

தமிழ்நாடு

சில வரி செய்திகள்

Added : ஏப் 05, 2021
Share
Advertisement
ராஜாஜி மார்க்கெட் நாளை விடுமுறை காஞ்சிபுரம்: சட்டசபை தேர்தல், நாளை நடக்கிறது. இந்நாளில், தனியார் மற்றும் பொதுத்துறை வணிக வளாகங்கள், நிறுவனங்கள், கடைகள், தொழிற்சாலைகள், ஓட்டல்கள் உள்ளிட்டவற்றில் வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்கு, சம்பளத்துடன் கூடிய விடுமுறை வழங்கப்பட வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி, வாக்காளர்கள், 100 சதவீதம் ஓட்டளிக்க வேண்டும் என்பதற்காக,

ராஜாஜி மார்க்கெட் நாளை விடுமுறை
காஞ்சிபுரம்: சட்டசபை தேர்தல், நாளை நடக்கிறது. இந்நாளில், தனியார் மற்றும் பொதுத்துறை வணிக வளாகங்கள், நிறுவனங்கள், கடைகள், தொழிற்சாலைகள், ஓட்டல்கள் உள்ளிட்டவற்றில் வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்கு, சம்பளத்துடன் கூடிய விடுமுறை வழங்கப்பட வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி, வாக்காளர்கள், 100 சதவீதம் ஓட்டளிக்க வேண்டும் என்பதற்காக, ஏப்., 6ல், காஞ்சிபுரம் ராஜாஜி மார்க்கெட் விடுமுறை என, ராஜாஜி மார்க்கெட் அனைத்து வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

விழிப்புணர்வு பேரணி
திருப்போரூர்: திருப்போருர் அடுத்த கோவளம் ஊராட்சியில், தனியார் தொண்டு நிறுவனம் சார்பில், 100 சதவீத ஓட்டளிப்பு விழிப்புணர்வு பேரணி, நேற்று நடந்தது. பேரணியில், பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள், முக கவசங்கள் வழங்கப்பட்டன.ஓட்டளிப்பதன் அவசியத்தையும், கொரோனா தொற்றில் இருந்து தப்பிக்க, பாதுகாப்பான முறையில் ஓட்டளிக்க வேண்டும் எனவும், பேரணியில் அறிவுறுத்தப்பட்டது.

'ஈஸ்டர்' விழா கொண்டாட்டம்
திருப்போரூர்: இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு, மூன்றாம் நாள் உயிரோடு எழுந்த நாளை, கிறிஸ்துவர்கள் உயிர்த்தெழுதல் நாளாகவும், ஈஸ்டர் பண்டிகையாகவும், கொண்டாடி வருகின்றனர். அதன்படி, நேற்று, ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்பட்டது.திருப்போரூர் அடுத்த தண்டலம் சி.எஸ்.ஐ., நல்மேய்ப்பர் ஆலயம் சார்பில், சபை ஊழியர் தாமஸ் மனோகரன் தலைமையில், ஈஸ்டர் ஆராதனை நடந்தது. ஏராளமான கிறிஸ்துவர்கள் பங்கேற்று, சிறப்பு ஆராதனையில் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X