துறைமுகம் : ''இளைஞர்கள் அரசியலுக்கு வந்து விட்டோம். பொதுமக்களாகிய நீங்கள் தான் வாய்ப்பளிக்க வேண்டும்,'' என, துறைமுகம் தொகுதி, பா.ஜ., வேட்பாளர் வினோஜ் பி.செல்வம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
துறைமுகம் தொகுதியில், அ.தி.மு.க., கூட்டணி சார்பில், பா.ஜ., வேட்பாளர் வினோஜ் பி.செல்வம் போட்டியிடுகிறார். இளம் வேட்பாளரான அவர், நேற்று வீதி வீதியாக நடந்து சென்று, இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டார்.அப்போது அவர் கூறியதாவது:துறைமுகம் தொகுதியில், ஒன்பது முறை தி.மு.க., வெற்றி பெற்றுள்ளது; இருந்தும், இத்தொகுதியில் மக்களின் வாழ்வாதாரம் முன்னேறவில்லை; அடிப்படை வசதிகள் கூட பூர்த்தி செய்யப்படவில்லை. இந்த தொகுதியில், தி.மு.க.,வினர் ரவுடியிசத்தை வைத்து வெற்றி பெறலாம் என நினைக்கின்றனர்.
மக்கள் தெளிவாக இருக்கின்றனர்; ஏமாற மாட்டார்கள்.இளைஞர்களாகிய நாங்கள் அரசியலுக்கு வந்து விட்டோம். மக்களாகிய நீங்கள் தான் வாய்ப்பு கொடுக்க வேண்டும். மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணம், எங்களுக்கு உள்ளது. எங்கள் எண்ணத்தை மதித்து, நீங்கள் ஆதரவு கொடுங்கள். உங்கள் நம்பிக்கை நிச்சயம் வீண் போகாது. துறைமுகம் தொகுதியில், 70 சதவீத ஓட்டுகள் எனக்கு பதிவாகும்.இவ்வாறு வினோஜ் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE