லாஸ்பேட்டையை முதன்மை தொகுதியாக்குவேன்பா.ஜ., வேட்பாளர் சாமிநாதன் வாக்குறுதி| Dinamalar

லாஸ்பேட்டையை முதன்மை தொகுதியாக்குவேன்பா.ஜ., வேட்பாளர் சாமிநாதன் வாக்குறுதி

Added : ஏப் 05, 2021
Share
புதுச்சேரி : 'புதுச்சேரி மாநிலம் வளர்ச்சி அடைய பா.ஜ., வுக்கு மக்கள் ஆதரவு அளிக்க வேண்டும்' என்று கூறி பா.ஜ., வேட்பாளர் சாமி நாதன் ஓட்டு சேகரித்தார். லாஸ்பேட்டை தொகுதி பா.ஜ., வேட்பாளர் சாமிநாதனுக்காக, பா.ம.க., அமைப்பாளர் தன்ராஜ் நேற்று பிரசாரம் செய்து தாமரை சின்னத்திற்கு ஓட்டு சேகரித்தார்.என்.ஆர்.காங்., பிரமுகர் கள் நந்தா ஸ்ரீதரன், நந்தா பூவராகவன், கிழக்கு மாநில அ.தி.மு.க.,

புதுச்சேரி : 'புதுச்சேரி மாநிலம் வளர்ச்சி அடைய பா.ஜ., வுக்கு மக்கள் ஆதரவு அளிக்க வேண்டும்' என்று கூறி பா.ஜ., வேட்பாளர் சாமி நாதன் ஓட்டு சேகரித்தார்.

லாஸ்பேட்டை தொகுதி பா.ஜ., வேட்பாளர் சாமிநாதனுக்காக, பா.ம.க., அமைப்பாளர் தன்ராஜ் நேற்று பிரசாரம் செய்து தாமரை சின்னத்திற்கு ஓட்டு சேகரித்தார்.என்.ஆர்.காங்., பிரமுகர் கள் நந்தா ஸ்ரீதரன், நந்தா பூவராகவன், கிழக்கு மாநில அ.தி.மு.க., இணைச் செயலாளர் அன்பானந்தம், மாநில பா.ஜ., துணைத் தலைவர் சப்த கிரி ராமலிங்கம், சப்தகிரி ரமேஷ், பொறியாளர் ரமேஷ், பா.ம.க., நிர்வாகி நரசிம்மன் பங்கேற்றனர்.வேட்பாளர் சாமிநாதன் பேசியதாவது:புதுச்சேரி மாநிலம் வளர்ச்சி அடைய பா.ஜ., வுக்கு மக்கள் அனைவரும் ஆதரவளிக்க வேண்டும். மத்திய அரசின் உதவியுடன் அனைத்து திட்டங்களும் நிறைவேற்றி, மாநிலம் வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்லப்படும்.

பா.ஜ., தேர்தல் அறிக்கையில் கூறிய அனைத்து வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம். இளைஞர்களுக்கு நல்ல எதிர்காலத்தை ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுப்போம். பெண்களுக்கான திட்டங் களுக்கு முன்னுரிமை அளிப்போம். அனைத்து தரப்பினரின் நலன்களும் பாதுகாக்கப்படும்.எம்.எல்.ஏ.,வாக வெற்றி பெற்றவுடன் லாஸ்பேட்டை தொகுதியை முதன்மை தொகுதியாக மாற்றுவதே எனது முதல் பணி. இதற்காக இரவு பகலாக உழைப்பதற்கு தயாராக இருக்கிறேன் என்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X