மக்கள் நலனே முக்கியம்: சைதை துரைசாமி பேச்சு| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

மக்கள் நலனே முக்கியம்: சைதை துரைசாமி பேச்சு

Added : ஏப் 05, 2021
Share
சென்னை : -''நான் எம்.எல்.ஏ., ஆனதும், தொகுதி மக்கள் மேம்பாட்டுக்காக தீவிரமாக உழைப்பேன். மக்கள் நலனே எனக்கு முக்கியம்,'' என, பிரசாரக் கூட்டத்தில், சைதை துரைசாமி பேசினார். சைதாப்பேட்டை தொகுதியில், அ.தி.மு.க., சார்பில், சைதை துரைசாமி போட்டியிடுகிறார். இவர், தொகுதி முழுவதும் தீவிர பிரசாரம் செய்தார். நேற்று, ஆலந்துார் சாலை, ஐந்து லைட் சந்திப்பு, மடுவாங்கரை, ஜோன்ஸ் சாலை, ஆண்டாள்

சென்னை : -''நான் எம்.எல்.ஏ., ஆனதும், தொகுதி மக்கள் மேம்பாட்டுக்காக தீவிரமாக உழைப்பேன். மக்கள் நலனே எனக்கு முக்கியம்,'' என, பிரசாரக் கூட்டத்தில், சைதை துரைசாமி பேசினார்.

சைதாப்பேட்டை தொகுதியில், அ.தி.மு.க., சார்பில், சைதை துரைசாமி போட்டியிடுகிறார். இவர், தொகுதி முழுவதும் தீவிர பிரசாரம் செய்தார். நேற்று, ஆலந்துார் சாலை, ஐந்து லைட் சந்திப்பு, மடுவாங்கரை, ஜோன்ஸ் சாலை, ஆண்டாள் நகர், ஜாபர்கான்பேட்டை, குமரன் காலனி போன்ற பகுதிகளில் பிரசாரம் செய்தார்.இவருடன், கூட்டணி கட்சியைச் சேர்ந்தவர்களும் பிரசாரத்தில் ஈடுபட்டனர். ஏற்கனவே, எம்.எல்.ஏ., மற்றும் மேயராக இருந்தபோது செய்த, மக்கள் நலத் திட்டங்கள் குறித்து பேசினார்.அதோடு, மனித நேய அறக்கட்டளை சார்பில் செய்யப்படும் நலத் திட்டங்கள் மற்றும் சாதனைகள் குறித்தும் விளக்கினார்.

இது குறித்து, சைதை துரைசாமி பேசியதாவது: நான் சம்பாதித்த பணத்தை எல்லாம் மக்களுக்காக செலவு செய்து வருகிறேன். மேயராக இருந்தபோது எப்படி செயல்பட்டேனோ அப்படியே, எம்.எல்.ஏ., ஆன பிறகும் செயல்படுவேன். மேயர் பதவியை பயன்படுத்தி, மா.சுப்பிரமணியன் போலி ஆவணங்கள் வாயிலாக, தொழிலாளர் குடியிருப்பை அபகரித்து உள்ளார். அவர் மீது, மோசடி உள்ளிட்ட, ஆறு பிரிவுகளில் வழக்கு உள்ளது. வழக்குகளின்படி பார்த்தால், 23 ஆண்டுகள் தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளது.இந்தியாவில், 'போர்ப்ஸ்' பத்திரிகை, 40 கல்வியாளர்களில் என்னை முதலிடத்தில் தேர்வு செய்தது.

ஜாதி, மதம் பாராமல் மனிதநேய அறக்கட்டளை செயல்படுவதால், இந்த அங்கீகாரத்தை வழங்கினர். லண்டன் பக்கிங்ஹாம் அரண்மனையில், இளவரசர் சார்லஸ், உலக சாதனையாளர்களுக்கு கொடுக்கும் விருந்தில் பங்கேற்ற பெருமை பெற்றவன் நான். சேவையால் உங்களுக்கு பெருமை ஏற்படுத்திக் கொடுத்த, சேவையாளனான எனக்கு உங்கள் ஓட்டா; நீதிமன்றத்தில் ஜாமின் பெற்றவருக்கு ஓட்டா என, சிந்தித்துக் கொள்ளுங்கள். என் சேவையை, சைதாப்பேட்டை மக்களாகிய நீங்கள் அங்கீகரிப்பீர்கள் என நம்புகிறேன்.தொகுதி மக்களின் மேம்பாட்டுக்காக, தீவிரமாக உழைப்பேன். மக்கள் நலனே எனக்கு முக்கியம். அவர்களுக்காக, எவ்வளவு நன்மை செய்ய முடியுமோ அவ்வளவு செய்வேன்.இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X