லாம்பர்ட் சரவணன் நகரில் அடிப்படை வசதிகள் என்.ஆர்.காங்., வேட்பாளர் பன்னீர்செல்வம் உறுதி

Added : ஏப் 05, 2021
Share
Advertisement
புதுச்சேரி, : உழவர்கரை நகர் தொகுதி என்.ஆர்., காங்., வேட்பாளர் பன்னீர்செல்வம் நேற்று லாம்பர்ட் சரவணன் நகர், சுதாகர் நகர், எம்.ஜி.ஆர். நகர் பகுதிகளில் வீடு வீடாக சென்று வாக்காளர்களிடம் ஓட்டு சேகரித்தார். அப்போது அவர் பேசுகையில், இங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பு பகுதிகளில் குடிநீர் பிரச்னையை தீர்த்து வைப்பேன். குடிசை மாற்று வாரியத்தின் மூலம் கட்டித் தரப்பட்டுள்ள

புதுச்சேரி, : உழவர்கரை நகர் தொகுதி என்.ஆர்., காங்., வேட்பாளர் பன்னீர்செல்வம் நேற்று லாம்பர்ட் சரவணன் நகர், சுதாகர் நகர், எம்.ஜி.ஆர். நகர் பகுதிகளில் வீடு வீடாக சென்று வாக்காளர்களிடம் ஓட்டு சேகரித்தார்.

அப்போது அவர் பேசுகையில், இங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பு பகுதிகளில் குடிநீர் பிரச்னையை தீர்த்து வைப்பேன். குடிசை மாற்று வாரியத்தின் மூலம் கட்டித் தரப்பட்டுள்ள குடியிருப்புகளுக்கு தர வேண்டிய முன்தொகை ரூ.48 ஆயிரத்தை தள்ளுபடி செய்ய நடவடிக்கை எடுப்பேன்.இப்பகுதியில் அடிப்படை வசதிகள் நிறைவேற்றித் தரப்படும். சாலை வசதி, கழிவு நீர் வாய்க்கால் வசதி, மின் விளக்கு வசதிகள் ஏற்படுத்தி தரப்படும். தண்ணீர் தேங்கி கிடப்பதால், கொசுக்கள் அதிகரித்துள்ளது. இப்பகுதியில் உழவர்கரை நகராட்சி மூலம், வாரந்தோறும் கொசு மருந்து தெளிக்கவும், வாய்க்கால்களை சீர் செய்வதற்கும் நடவடிக்கை எடுப்பேன்.மேலும், பாதாள சாக்கடை வசதிகள் ஏற்படுத்தி தரப்படும்.

பெண்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த தொழிற் பயிற்சி முகாம்கள் நடத்தி, வேலை வாய்ப்புகள் உருவாக்கவும் நடவடிக்கை எடுப்பேன். மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு பிணையில்லா கடன் மற்றும் முத்ரா கடன் பெற்று தருவேன். சிறுவர் மற்றும் முதியோர்களுக்கு பொழுது போக்கு பூங்கா அமைத்து தரப்படும். விளையாட்டு மைதானம் ஏற்படுத்தி தரவும் நடவடிக்கை எடுப்பேன், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X