கோபால் பெறும் வெற்றி எனது வெற்றி தி.மு.க., அமைப்பாளர் சிவா உருக்கம்

Added : ஏப் 05, 2021
Share
Advertisement
புதுச்சேரி : உருளையன்பேட்டை தொகுதி தி.மு.க., வேட்பா ளர் கோபாலுக்கு ஆதரவாக, தெற்கு மாநில தி.மு.க., அமைப்பாளர் சிவா திறந்த ஜீப்பில் சென்று உதயசூரியன் சின்னத்திற்கு ஓட்டு சேகரித்தார். பிரசாரத்தில் வேட்பாளர் கோபால், காங்., பொதுச் செயலாளர் ரகுமான், கம்யூ., வி.சி., உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற் றனர். அப்போது அவர் பேசியதாவது:குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000

புதுச்சேரி : உருளையன்பேட்டை தொகுதி தி.மு.க., வேட்பா ளர் கோபாலுக்கு ஆதரவாக, தெற்கு மாநில தி.மு.க., அமைப்பாளர் சிவா திறந்த ஜீப்பில் சென்று உதயசூரியன் சின்னத்திற்கு ஓட்டு சேகரித்தார்.

பிரசாரத்தில் வேட்பாளர் கோபால், காங்., பொதுச் செயலாளர் ரகுமான், கம்யூ., வி.சி., உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற் றனர். அப்போது அவர் பேசியதாவது:குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 வழங்கப்படும், கல்விக் கடன், சுய உதவிக்குழுக்களின் கடன் தள்ளுபடி உட்பட பல அறிவிப்புகளை தி.மு.க., தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார். கருணாநிதியை போல ஸ்டாலினும் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவார். உருளையன்பேட்டை மக்கள் என்னை 1996ல் எம்.எல்.ஏ.,வாக தேர்வு செய்தனர்.

அப்போது தொகுதியில் இருந்த சாராயக்கடைகளை அகற்ற எப்படி கஷ்டப்பட்டேன் என உங்களுக்கு தெரியும்.பட்டா இல்லாதவர்களுக்கு பட்டா பெற்றுக் கொடுத்து, கல்வீடுகள் கட்ட அரசின் மானியம் பெற்றுத் தந்தேன். எனது தொடர் பணியின் காரணமாக உருளையன் பேட்டை தொகுதி தற்போது குடிசையில்லா தொகுதியாக மாற்றப்பட்டுள்ளது. என்னைப் போல் உங்கள் வீட்டுப் பிள்ளையாக இருக்கக் கூடிய கோபாலை இத்தொகுதியில் நிறுத்தியுள்ளேன். வில்லியனுாரில் போட்டியிட்டாலும், உருளையன் பேட்டை தொகுதியிலும் தி.மு.க., மிகப் பெரிய வெற்றியை பெற்றுத்தர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X