திருக்கனுார், : மண்ணாடிப்பட்டு பா.ஜ., வேட்பாளர் நமச்சிவாயத்தை ஆதரித்து என்.ஆர்.காங்., தலைவர் ரங்கசாமி நேற்று பிரசாரம் செய்தார்.மண்ணாடிப்பட்டு தொகுதி திருக்கனுார் பஜார் வீதியில் திறந்த வேனில், பிரசாரம் செய்த அவர் பேசியதாவது:கடந்த 5 ஆண்டுகளாக மோசமான ஆட்சி நடந்தது.
முதியோர் பென்ஷன் தொகை உயர்த்தி வழங்க வில்லை. மாணவர்கள் கல்வி உதவி தொகை நிறுத்தப்பட்டது. கூட்டுறவு சர்க்கரை ஆலையும் கடந்த ஆட்சியில் மூடப்பட்டது.கவர்னரிடம் சண்டை போடுவது, மத்திய அரசை விமர்சனம் செய்வதை மட்டுமே செய்தது. மத்திய, மாநில அரசு இடையே நல்ல உறவு இருந்தால் தான் மாநிலத்திற்கு உதவிகளை பெற முடியும். பொதுமக்கள் விழிப்புடன் இருந்து பா.ஜ., கூட்டணி வேட்பாளர்களை அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்தால், மட்டுமே மாநில வளர்ச்சிக்கு மத்திய அரசின் ஒத்துழைப்புடன் நலத்திட்ட உதவிகளை பெற முடியும்.
இத்தொகுதியின் வேட்பாளருக்கு உடல்நிலை பாதித்துள்ளதால், பிரசாரம் செய்ய வர முடியவில்லை. அவரது ஆதரவாளர்கள், தொண்டர்கள் கடுமையாக உழைத்து அவரை வெற்றி பெற செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.இதில், முன்னாள் எம்.எல்.ஏ., அருள்முருகன், பா.ஜ., பிரமுகர்கள் முத்த ழகன், கண்ணன், தமிழ்மணி, செல்வகுமார், துரை ராஜன், அ.தி.மு.க., நிர்வாகிகள் சுத்துக்கேணி பாஸ்கர், மகாதேவி, நாசர் உட்பட பலர் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE