புதுச்சேரி : நெல்லித்தோப்பு தொகுதி பா.ஜ.,வேட்பாளர் ரிச்சர்ட்ஸ் ஜான்குமாருக்கு ஆதரவாக அவரது தந்தை, காமராஜ் நகர் பா.ஜ.,வேட்பாளர் ஜான்குமார் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் முக்கிய வீதிகளில் திறந்த வேனில் சென்று இறுதி கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டார்.இருவருக்கும் அப்பகுதி மக்கள் ஆரத்தி எடுத்து, மலர் துாவி, இளைஞர்கள் பட்டாசு வெடித்து சிறப்பாக வரவேற்பு அளித்தனர்.
அப்போது ஜான்குமார் பேசுகையில், என்னை போலவே எனது மகனும் நெல்லித்தோப்பு தொகுதி மக்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுப்பார். நானும் தொகுதி பிரச்னைகளை கவனித்துக் கொள்வேன். எனவே ரிச்சர்ட்ஸ் ஜான்குமாருக்கு தாமரை சின்னத்திற்கு ஓட்டளித்து அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றிப் பெற செய்ய வேண்டும், என்றார்.பா.ஜ., வேட்பாளர் ரிச்சர்ட்ஸ் ஜான்குமார் பேசுகையில், மத்திய அரசு புதுச்சேரி மாநிலத்திற்கு பல்வேறு வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
இந்த திட்டங்கள் அனைத்தும் தொகுதி மக்களுக்கு பெற்று தருவேன்.எனது தந்தை இத்தொகுதியை வளர்ச்சி பாதைக்கு கொண்டு சென்றுள்ளார். அவரது பணியை நானும் தொடர்ந்து செய்வேன். தொகுதி மக்கள் என்னை எப்போதும் வேண்டுமென்றாலும் எளிதாக சந்தித்து குறைகளை தெரிவிக்கலாம். ஆகையால் தாமரை சின்னத்திற்கு ஓட்டளித்து என்னை வெற்றிப் பெற செய்ய வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE