புதுச்சேரி : புதுச்சேரியில் நேற்று 227 பேருக்கு புதிதாக தொற்று உறுதியானது.புதுச்சேரி மாநிலத்தில் நேற்று 2416 பேருக்கு பரிசோதனை செய்ததில் புதுச்சேரியில் 160 பேர், காரைக்கால் 63, ஏனாம் 1; மாகி 3 உட்பட 227 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
மாநிலத்தில் கொரோனா பாதித்தோரின் மொத்த எண்ணிக்கை 42 ஆயிரத்து 359 ஆனது. கொரோனா தொற்றினால் மருத்துவமனைகளில் 404 பேரும், வீடுகளில் 1188 பேர் உட்பட 1592 பேர் சிகிச்சையில் உள்ளனர். நேற்று உயிரிழப்பு இல்லை. இதனால் தொற்றினால் இறந்தோர் எண்ணிக்கை 684 ஆக நீடிக்கிறது.நேற்று புதுச்சேரியில் 73 பேர், காரைக்கால் 28, ஏனாம் 2, மாகி 6 பேர் உட்பட 109 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். வீடு திரும்பியோர் எண்ணிக்கை 40 ஆயிரத்து 83ஆக அதிகரித்தது. புதுச்சேரி பிராந்தியத்தில் 31 ஆயிரத்து 527 பேரும், காரைக்கால் 4173, ஏனாம் 2096, மாகி 2287 பேர் இது வரை குணமாகியுள்ளனர். மாநிலத்தில் இது வரை 6 லட்சத்து 80 ஆயிரத்து 74 பேருக்கு பரிசோதனை செய்ததில், 6 லட்சத்து 27 ஆயிரத்து 106 பேருக்கு கொரோனா இல்லை என முடிவு வந்துள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE