அரியாங்குப்பம் : பூத் சிலிப்புடன் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க முயன்ற இரண்டு வாலிபர்களை போலீசார் கைது செய்து ரூ. 21 ஆயிரத்து 400 பறிமுதல் செய்தனர்.
அரியாங்குப்பம் சுனாமி குடியிருப்பு பகுதியில் பூத் சிலிப்புடன் வீடுகளுக்கு சென்று பணம் தருவதாக போலீசாருக்கு கடந்த 2ம் தேதி புகார் வந்தது. அரியாங்குப்பம் போலீசார் அந்த பகுதியில் கண் காணித்தனர். அப்போது வீராம்பட்டிணம் ரமேஷ், 38; முகிலன், 35; ஆகியோர் அந்த பகுதியில் உள்ள வீடுகளில் காங்., கட்சிக்கு ஆதரவாக வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த போது கையும் களவுமாக போலீசாரிடம் சிக்கினர். அவர்களிடம் இருந்து ரூ.21 ஆயிரத்து 700 பணத்தை பறிமுதல் செய்து, இருவரையும் கைது செய்து, விசாரிக்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE