சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வடபழநி கோவில் மாடவீதியில் சமூக விரோதிகள் அட்டகாசம்

Added : ஏப் 05, 2021
Share
Advertisement
சென்னை : வடபழநி கோவில் நிர்வாகம் கட்டுப்பாட்டில் உள்ள, காரிய மண்டபத்தின் பூட்டை, அத்துமீறி உடைத்து, ஆக்கிரமித்துள்ள சமூக விரோத கும்பல், மாட வீதியையும் ஆக்கிரமித்து, அராஜகத்தில் ஈடுபட்டதால், ஏராளமான பக்தர்கள் கடும் பாதிப்படைந்தனர். சென்னைக்கு மேற்கே, வடபழநி ஷேத்ரத்தில் அமைந்துள்ளது, வடபழநி ஆண்டவர் கோவில். 1890ம் ஆண்டு எளிய ஓலைக்கூரைக் கொட்டகையுடன் இக்கோவில்

சென்னை : வடபழநி கோவில் நிர்வாகம் கட்டுப்பாட்டில் உள்ள, காரிய மண்டபத்தின் பூட்டை, அத்துமீறி உடைத்து, ஆக்கிரமித்துள்ள சமூக விரோத கும்பல், மாட வீதியையும் ஆக்கிரமித்து, அராஜகத்தில் ஈடுபட்டதால், ஏராளமான பக்தர்கள் கடும் பாதிப்படைந்தனர்.

சென்னைக்கு மேற்கே, வடபழநி ஷேத்ரத்தில் அமைந்துள்ளது, வடபழநி ஆண்டவர் கோவில். 1890ம் ஆண்டு எளிய ஓலைக்கூரைக் கொட்டகையுடன் இக்கோவில் நிர்மாணிக்கப்பட்டது. 1920ல், இக்கோவில் புதுப்பிக்கப்பட்டது. இதையடுத்து, 1972ல் ராஜகோபுரம் கட்டப்பட்டது. வடபழநி ஆண்டவர் கோவிலில், மூலவர் பழநி முருகன், நின்ற கோலத்தில்

, காலில் பாதரட்சைகளுடன் அருள்பாலிக்கிறார். நவகிரகங்களில் ஒன்றான, செவ்வாய்க் கென்று இங்கு தனி சன்னதி உள்ளது. வரசித்தி விநாயகர், சொக்கநாதர், மீனாட்சி அம்மன், காளி, பைரவர், மற்றும் வள்ளி, தேவசேனா சமேத சண்முகர் என, பல சன்னதிகள் உள்ளன.பழநிக்கு நிகரான இக்கோவிலில், அதிகாலை, 5:30 மணி முதல் இரவு, 9:30 மணி வரை வழிபாடு நடத்தப்படுகிறது.இவ்வளவு சிறப்பு பெற்ற இக்கோவில், பக்தர்களின் பிரார்த்தனை தலமாக விளங்குவதால், தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசித்து வருகின்றனர்.

வார விடுமுறை நாட்களில், இருமடங்கு பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.கோவில் மாட வீதியில், குளக்கரையில் காரிய மண்டபம் ஒன்று உள்ளது. சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டில் இருந்த அந்த காரிய மண்டபத்தை சமூக விரோதிகள் ஆக்கிரமித்தனர். அங்கு காரியம் செய்ய வருவோரிடம் கணிசமான தொகை பெற்று, வசதிகள் செய்துக் கொடுப்பதாக கூறி, மாடவீதிகளை ஆக்கிரமித்து, பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுத்துவது வழக்கம். பக்தியோடு கோவிலுக்கு வரும் பக்தர்கள், தீட்டு காரியங்களை பார்க்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டு வந்தது. இது, பக்தர்களை முகம் சுளிக்க வைத்தது.இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஏராளமான பக்தர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில், காரிய மண்டபத்தை, கோவில் நிர்வாகத்தின் வசம் மாநகராட்சி ஒப்படைத்தது.

இதையடுத்து, காரிய மண்டபத்திற்கு பூட்டு போடப்பட்டது.வருமானம் இழந்த சமூக விரோதிகள், கோவில் நிர்வாகம் பூட்டிய பூட்டை உடைத்து, அராஜகமாக கைப்பற்றி, காரியம் செய்வோரிடம் பணம் பெற்று, வழக்கமான வசதிகளை செய்யும் பக்தர்களை தவிக்க வைக்கின்றனர். இது தொடர்பாக, காவல்துறைக்கு முறையான புகார் கொடுத்தும், இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.இந்நிலையில், நேற்று காரியம் செய்வோருக்கு வசதியாக, மாடவீதியை, சமூக விரோதிகள் ஆக்கிரமித்து, போக்குவரத்திற்கு இடையூறு செய்தனர். நேற்று வார விடுமுறை என்பதால், கோவிலுக்கு வந்த ஏராளமான பக்தர்கள், கடுமையாக பாதிப்படைந்தனர்.எனவே, சம்பந்தப்பட்ட காவல்துறை, உடனடியாக நடவடிக்கை எடுத்து, இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என பக்தர்கள் கோரியுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X