சென்னை : 'தமிழக சட்டசபை மற்றும் கன்னியாகுமரி லோக்சபா தொகுதி இடைத் தேர்தலுக்காக, தொழிலாளர்களுக்கு நாளை விடுமுறை அளிக்காவிட்டால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என, தொழிலாளர் கமிஷனர் எச்சரித்து உள்ளார்.
இது குறித்து, தொழிலாளர் கமிஷனர் வள்ளலார் வெளியிட்டுள்ள உத்தரவு:தமிழக சட்டசபை தேர்தல் மற்றும் கன்னியாகுமரி லோக்சபா தொகுதிக்கான இடைத்தேர்தல் நாளை நடக்கிறது. இதில் ஓட்டளிக்கும் வகையில், அனைத்து தொழிலாளர்களுக்கும், சம்பளத்துடன் கூடிய விடுப்பு வழங்க வேண்டும். மீறுவோர் மீது, சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இதுகுறித்த புகார்களை, மாநில தொழிலாளர் இணை கமிஷனர் மாதவனுக்கு, 94872 69270; துணை கமிஷனர் விமலநாதனுக்கு, 94425 40984; உதவி கமிஷனர்கள் ஜானகிராமனுக்கு, 86103 08192, 044 - 2433 5107; மணிமேகலைக்கு, 94446 47125 மற்றும் சாந்திக்கு, 73052 80011 என்ற எண்களில் புகார் அளிக்கலாம்.
இவ்வாறு அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில், விடுமுறை அளிக்காத தொழில் நிறுவனங்கள் குறித்த புகார்களை, ரேவதி, தொழிலாளர் உதவி ஆணையர் அமலாக்கம், சென்னை - 98402 49504; தாசரதி, தொழிலாளர் உதவி ஆய்வரிடம், 98412 08118, 79048 93374, 77084 87415 ஆகிய எண்களில் புகார் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரம், கூடுதல் இயக்குனர், சென்னை விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழகத்தில் இயங்கும் அனைத்து தொழிற்சாலை நிறுவனங்களும், கட்டடம் மற்றும் கட்டுமான நிறுவனங்களில் பணிபுரியும் நேரடி மற்றும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு, ஏப்., 6ம் தேதி, சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும்.சட்ட விதிகளை மீறும் தொழிற்சாலைகள் மற்றும் கட்டுமான நிறுவனங்கள் மீது புகார்கள் தெரிவிக்க, தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் இணை இயக்குனர்கள், கார்த்திகேயன், சென்னை, கும்மிடிப்பூண்டி தாலுகா - 94442 21011. சரவணன், அம்பத்துார், சென்னை - 98434 31020 ஆகியோரை தொடர்பு கொள்ளலாம்.கவிதா, கிண்டி - 91596 62409; ஜெயகுமார், சென்னை, தாம்பரம் தாலுகா - 91762 22394; பாலு, திருவொற்றியூர், பொன்னேரி தாலுகா - 94869 18205. குமார், திருவள்ளூர் மாவட்டம் - 94440 02025; இளங்கோவன், காஞ்சிபுரம் மாவட்டம் - 94431 69506; ஜவகர், கட்டடம் மற்றும் கட்டுமானம் - 94440 02441 ஆகியோரை தொடர்பு கொள்ளலாம்.அவ்வாறு பெறப்படும் புகார்களின் அடிப்படையில், மேற்கூறிய அதிகாரிகளால், அந்நிறுவனங்கள் மீது தகுந்த, குற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE