வில்லியனுார் : வில்லியனுார் தொகுதி என்.ஆர்.காங்., வேட்பாளர் சுகுமாறனைஆதரித்து முன்னாள் முதல்வர் ரங்கசாமி வீதி வீதியாக சென்று ஓட்டு சேகரித்தார்.
அப்போது அவர் பேசியதாவது: மக்கள் விழிப்புடன் இருக்கவேண்டிய நேரம் இது. ஒருதடவை ஏமாந்தால் ஐந்தாண்டுகள் வீணாகிவிடும். ஊழலற்ற ஆட்சி அமைய என்.ஆர்.காங்., வேட்பாளருக்கு ஜக்கு சின்னத்தில் ஓட்டளியுங்கள். கடந்த காங்., ஆட்சியின் திறமையின்மை யால், புதுச்சேரி மாநிலம் அனைத்து துறையிலும் பின் நோக்கி சென்றுவிட்டது.கடந்த முறை நான் ஆட்சியில் இருந்த போது இலவச அரிசி, முதியோர் உதவித் தொகை, மிக்சி கிரைண்டர், மாணவர்களுக்கு சென்டாக் பணம் என பல திட்டங்களை செய்தேன். மீண்டும் என்.ஆர்.காங்., கட்சிக்கு ஓட்டளியுங்கள்.மாநிலத்தில் படித்த இளைஞர்களுக்கு தகுதிகேற்ப நேர்மையான முறையில் வேலை வீடு தேடி வரும்.
என்.ஆர்.காங்., கட்சி எப்போதும் சிறுபான்மை மக்களுக்கு பாதுகாப்பு அரணாக இருக்கும். மத்திய அரசுடன் இணக்கமான உறவு இருந்தால், புதுச்சேரி வளர்ச்சி பெற முடியும்.அதற்காகவே கூட்டணி அமைத்து தேர்தலைசந்திக்கிறோம்.எனவே, சுகுமாறனுக்கு ஜக்கு சின்னத்தில் ஓட்டளித்து வெற்றி பெறச் செய்யுங்கள். இவ்வாறு அவர் பேசினார். முன்னாள் எம்.எல்.ஏ., நடராஜன், என்.ஆர்.காங்., நாராயணசாமி, ராஜேஷ், செந்தில்உடனிருந்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE