கேபிள் டிவி ஊழியர் கொலை: இருவர் கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கேபிள் 'டிவி' ஊழியர் கொலை: இருவர் கைது

Added : ஏப் 05, 2021
Share
தாம்பரம் : தனியார் கேபிள், 'டிவி' நிறுவன ஊழியர் கொலை செய்யப்பட்டது குறித்து, தாம்பரம் ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர். செங்கல்பட்டு மாவட்டம், கூடுவாஞ்சேரி மற்றும் பொத்தேரி ரயில் நிலையங்களுக்கு இடையே, தைலாபுரம், புவனேஸ்வரி அம்மன் கோவில் அருகே, ரயில்வே இருப்புப்பாதையை ஒட்டி, ஆண் சடலம் கிடப்பதாக, தாம்பரம் ரயில்வே போலீசாருக்கு, நேற்று காலை தகவல் கிடைத்தது. எஸ்.ஐ.,

தாம்பரம் : தனியார் கேபிள், 'டிவி' நிறுவன ஊழியர் கொலை செய்யப்பட்டது குறித்து, தாம்பரம் ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.

செங்கல்பட்டு மாவட்டம், கூடுவாஞ்சேரி மற்றும் பொத்தேரி ரயில் நிலையங்களுக்கு இடையே, தைலாபுரம், புவனேஸ்வரி அம்மன் கோவில் அருகே, ரயில்வே இருப்புப்பாதையை ஒட்டி, ஆண் சடலம் கிடப்பதாக, தாம்பரம் ரயில்வே போலீசாருக்கு, நேற்று காலை தகவல் கிடைத்தது. எஸ்.ஐ., மாரியப்பன், இன்ஸ்பெக்டர் ரத்னகுமார் தலைமையிலான போலீசார் சென்று, ஆய்வு செய்ததில், 20 இடங்களில் கத்திக்குத்து காயங்கள் இருந்தன.விசாரணையில், இறந்தவர் கூடுவாஞ்சேரி அடுத்த மாடம்பாக்கம், வரதராஜபுரத்தைச் சேர்ந்த நாராயணமூர்த்தி, 39 என்பதும், அவருக்கு அம்மு, 32 என்ற மனைவியும், இரு பெண் குழந்தைகள் இருப்பதும் தெரிந்தது.

நாராயணமூர்த்தி, தாம்பரம் அடுத்த சேலையூரில் உள்ள, தனியார் கேபிள் டிவியில் பணிபுரிந்துள்ளார்.இந்நிலையில், நாராயணமூர்த்தியை கொலை செய்ததாக, அவரது நண்பர்களான வெங்கடேசன், 39 மற்றும் கோபிநாத், 37 ஆகிய இருவரை, கூடுவாஞ்சேரி போலீசார் கைது செய்தனர்.இதுகுறித்து வழக்குப் பதிந்துள்ள தாம்பரம் ரயில்வே போலீசார், இன்று இந்த வழக்கை, கூடுவாஞ்சேரி போலீசாரிடம் ஒப்படைக்க உள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X