மதுரை சினிமா செய்திகள்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மதுரை சினிமா செய்திகள்

Added : ஏப் 05, 2021
Share
திரையுலகினரை மிரட்டும் கொரோனாகொரோனாவின், இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. கோலிவுட் முதல், பாலிவுட் வரை, பலர் இந்நோய்க்கு ஆளாகி வருகின்றனர். அமிர் கான், மாதவன், ஆலியா பட் உள்ளிட்டோர் இந்நோயால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று மேலும் சிலர் இந்நோய்க்கு ஆளாகி உள்ளனர். தமிழில் ரஜினி மற்றும் கமல் படங்களில் மகளாக நடித்த நிவேதா தாமஸ், தயாரிப்பாளர்

திரையுலகினரை மிரட்டும் கொரோனாகொரோனாவின், இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. கோலிவுட் முதல், பாலிவுட் வரை, பலர் இந்நோய்க்கு ஆளாகி வருகின்றனர். அமிர் கான், மாதவன், ஆலியா பட் உள்ளிட்டோர் இந்நோயால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று மேலும் சிலர் இந்நோய்க்கு ஆளாகி உள்ளனர். தமிழில் ரஜினி மற்றும் கமல் படங்களில் மகளாக நடித்த நிவேதா தாமஸ், தயாரிப்பாளர் சசிகாந்த், 96 பட புகழ் கவுரி கிஷன் உள்ளிட்டோரும், இந்நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இவர்கள் அனைவரும், வீட்டிலேயே தனிமைப்படுத்தி, மருத்துவர்கள் ஆலோசனைப்படி சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்துள்ளனர். பிரபாஸ் - -லோகேஷ் கனகராஜ் கூட்டணிநடிகர் பிரபாஸ் தற்போது நடித்து வரும் ஆதிபுருஷ், சலார் உள்ளிட்ட படங்கள், பல மொழிகளில் உருவாகும், 'பான் -இந்தியா' படமாகவே தயாராகிறது. மேலும், ஒவ்வொரு மொழியிலும், வளரும் இயக்குனர்களின் இயக்கங்களில் நடிக்கவும் முடிவு செய்துள்ளார். தற்போது, கன்னட இயக்குனர் பிரஷாந்த் நீல் இயக்கும், சலார் படத்தில் நடிப்பவர், அடுத்து தமிழில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க, பேச்சு நடந்து வருகிறது. இவர்கள் இணைவது உறுதியானால், அடுத்த ஆண்டு மே மாதம் படம் ஆரம்பமாகும் என்கின்றனர்.

அதற்குள், கமல் நடிக்க உள்ள விக்ரம் படத்தை, லோகேஷ் முடித்துவிடுவார் எனவும் கூறப்படுகிறது. ஓ.டி.டி.,யில்த்ரிஷா படம் 'ரிலீஸ்'திருஞானம் இயக்கத்தில், த்ரிஷா நடித்துள்ள படம் பரமபத விளையாட்டு. ஏற்கனவே இப்படத்தின் டிரைலர் வெளியாகி சலசலப்பை ஏற்படுத்தி யது. நீண்ட நாட்களாக கிடப்பில் கிடந்த இப்படம், ஒரு ஓ.டி.டி., தளத்தில், தமிழ் புத்தாண்டில் ரிலீஸ் செய்ய இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதே போல், த்ரிஷா நடித்துள்ள சதுரங்க வேட்டை - 2, கர்ஜனை படங்களுக்கும் சீக்கிரம் விடிவுகாலம் பிறக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. 'சர்க்கஸில் சேர்ந்து விடலாமா' - ராய் லட்சுமிமிருகா படத்திற்கு பின், சிண்ட்ரெல்லா படத்தில் நடித்து வருகிறார் ராய் லட்சுமி. சமூக வலைதளத்தில் விதவிதமாக கவர்ச்சியான, உடற்பயிற்சி செய்யும் போட்டோக்களை பதிவிட்டு வருகிறார். உடலை கட்டுக்கோப்பாக வைக்க, விதவிதமான உடற்பயிற்சி உபகரணங்களை விரும்பி வாங்கி, அதில் தன் உடற்பயிற்சி முறையை மாற்றியுள்ளார்.இது குறித்த போட்டோ ஒன்றை வெளியிட்டுள்ள ராய் லட்சுமி, 'உடற்பயிற்சி செய்வதற்கு புது வழிகளை கண்டு பிடித்துள்ளதால், எனக்கு போரடிப்பதில்லை. இதையெல்லாம் பார்க்கும்போது பேசாமல் சர்க்கஸில் சேர்ந்து விடலாமா என நினைக்கிறேன்' என, கூறியுள்ளார்.அப்பா,- மகன் கதையை பேசும் 'அனுக்கிரகன்'முரளி ராதாகிருஷ்ணன், அஜய் கிருஷ்ணா, ஸ்ருதி ராமகிருஷ்ணா, தீபா, மாஸ்டர் ராகவன் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் அனுக்கிரகன். சுந்தர் கிரிஷ் இயக்கி இருக்கிறார். 'அனுக்கிரகன் என்றால் அருள் அல்லது ஆசீர்வாதம் எனப் பொருள். இறைவனின் ஆசீர்வாத மாகவே மாறிய ஒரு மகனைப் பற்றிய கதை தான் இது. திரைக்கதையில் ஒரு புதுமை செய்து, ஹாலிவுட் தரத்தில் எடுத்துள்ளோம். நடுத்தர வயதுள்ள அனைவரையும் தன் பால்ய காலத்துக்கு திரும்பி பார்க்க வைக்கும் ஒரு கதையாக இப்படம் இருக்கும்' என்கிறது படக்குழு.இதோ வரேன்டா... - தயாரிப்பாளர் 'ஷாக்!'எவ்வளவோ தொழில்நுட்பங்கள் வந்த பின்னும், சினிமாவில் உள்ள பைரசியை தடுக்க முடியவில்லை. இப்போது, பைரசி தளங்கள் டெலிகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களிலும் கொட்டிக் கிடக்கின்றன. கார்த்தி,ராஷ்மிகா நடிப்பில் வெளியாகி உள்ள சுல்தான் பட பைரசி லிங்கை, அதன் தயாரிப்பாளரான எஸ்.ஆர்.பிரபுவின் டுவிட்டர், கமென்ட்டில் ஒருவர் பதிவிட்டு, சுல்தான் படம் தற்போது என்னுடைய டெலிகிராம் சேனலில் இருக்கிறது' என, குறிப்பிட்டார். இதற்கு, ''அடேய், என் கமென்ட்ல வந்து, என் படத்துக்கே பைரசி பிரமோட் பண்ற அளவுக்கு வளர்ந்துட்டீங்களா, இதோ வரேன்டா,'' என, தன் கோபத்தை பதிவிட்டுள்ளார் பிரபு.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X