அனைத்து தரப்பு மக்களும் உயர கைகொடுப்பேன் தி.மு.க., வேட்பாளர் எஸ்.பி.சிவக்குமார் அறிவிப்பு

Added : ஏப் 05, 2021
Share
Advertisement
புதுச்சேரி : ராஜ்பவன் தொகுதி தி.மு.க., வேட்பாளர் எஸ்.பி.சிவக்குமார் நேற்று தொகுதி முழுவதும் வலம் வந்து ஓட்டு சேகரித்தார். பல இடங்களில் மக்கள் மலர் துாவியும், மாலை அணிவித்தும் உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது அவர் பேசியதாவது:உண்மை, நேர்மை, நம்பிக்கை, எளிமை, பாரபட்சமற்ற உழைப்பு, வன்முறையற்ற அணுகுமுறை ஆகியவற்றை மூலதனமாக வைத்து ராஜ்பவன் தொகுதியில் போட்டியிடுகிறேன்.

புதுச்சேரி : ராஜ்பவன் தொகுதி தி.மு.க., வேட்பாளர் எஸ்.பி.சிவக்குமார் நேற்று தொகுதி முழுவதும் வலம் வந்து ஓட்டு சேகரித்தார்.

பல இடங்களில் மக்கள் மலர் துாவியும், மாலை அணிவித்தும் உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது அவர் பேசியதாவது:உண்மை, நேர்மை, நம்பிக்கை, எளிமை, பாரபட்சமற்ற உழைப்பு, வன்முறையற்ற அணுகுமுறை ஆகியவற்றை மூலதனமாக வைத்து ராஜ்பவன் தொகுதியில் போட்டியிடுகிறேன். இந்த தேர்தலில் எனது வெற்றி தொகுதி மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கு பயன்படும். அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதற்கு பயன்படும்.காலம் காலமாக திறக்காமல் உள்ள குடிநீர் தொட்டியை திறக்க பயன்படும். கழுத்தளவு நீரில் கழிவறைக்கு செல்லக்கூட முடியாத சூழலை மாற்றுவதற்கு பயன்படும். சுத்தமான, சுகாதாரமான நல்ல குடிநீரை பெற பயன்படும்.

இதுபோன்ற திட்டங்களுடன் போட்டியிடுகிறேன். சம்பாதிப்பதற்காக நான் வரவில்லை;சொத்து சேர்ப்பதற்காகவும் வரவில்லை. என் மீது பாசமும், நேசமும் கொண்டு அன்புடன் வரவேற்கின்ற அனைத்து தரப்பு மக்களும் வாழ்க்கையில் உயர கைகொடுப்பதற்காக வந்துள்ளேன்.தொகுதி முழுவதும் மக்கள் பாதுகாப்பாகவும், நிம்மதியாகவும் வாழும் சூழலை ஏற்படுத்துவேன். இவை அனைத்தையும் நிச்சயமாக செய்து தருவேன் என வாக்குறுதி அளிக்கிறேன்.இவ்வாறு, அவர் பேசினார்.தி.மு.க., - காங்., - இந்திய கம்யூ., - மா. கம்யூ., - வி.சி., கட்சிகளின் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X