ராஜ்பவன் தொகுதியை விட்டு செல்ல மாட்டேன்

Added : ஏப் 05, 2021
Share
Advertisement
புதுச்சேரி : ராஜ்பவன் தொகுதியில் என்.ஆர்., காங்.,வேட்பாளர் முன்னாள் அமைச்சர் லட்சுமி நாராயணன் நேற்று வைத்திக்குப்பம் செல்வராஜ் செட்டியார் வீதி இறுதி கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசும் போது, சட்டசபைக்கு நான் ஐந்தாவது முறையாக போட்டியிடுகிறேன். மக்கள் முதல்வர் ரங்கசாமியின் ஆசி பெற்ற சின்னமான ஜக்கு சின்னத்தில் பெருவாரியான ஓட்டுகள் வித்தியாசத்தில்

புதுச்சேரி : ராஜ்பவன் தொகுதியில் என்.ஆர்., காங்.,வேட்பாளர் முன்னாள் அமைச்சர் லட்சுமி நாராயணன் நேற்று வைத்திக்குப்பம் செல்வராஜ் செட்டியார் வீதி இறுதி கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது அவர் பேசும் போது, சட்டசபைக்கு நான் ஐந்தாவது முறையாக போட்டியிடுகிறேன். மக்கள் முதல்வர் ரங்கசாமியின் ஆசி பெற்ற சின்னமான ஜக்கு சின்னத்தில் பெருவாரியான ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும். இரண்டு முறை ராஜ்பவன் தொகுதி எம்.எல்.ஏவாக என்னை சட்டசபைக்கு அனுப்பி வைத்த நீங்கள் மூன்றாவது முறையாக வாய்ப்பை எனக்கு தாருங்கள். நான் என்றுமே உங்களோடு இருப்பேன்.வருங்காலத்தில் ராஜ்பவன் தொகுதியை மாநிலத்தின் முதன்மை தொகுதியாக மாற்ற நடவடிக்கை எடுப்பேன். எக்காரணத்தைக் கொண்டும் ராஜ்பவன் தொகுதியை விட்டு நான் செல்ல மாட்டேன். நீங்கள் எனக்கு அளித்துவரும் ஆதரவை என்றும் மறக்க மாட்டேன், என்றார்.

அப்பகுதி மக்கள், ராஜ்பவன் தொகுதிக்கு நீங்கள் செய்த அடிப்படை வசதிகளை நாங்கள் மறக்க மாட்டோம். மக்களோடு மக்களாக நின்று நீங்கள் செய்துவரும் பணிக்காக உங்களுக்கு தான் எங்கள் ஓட்டு என்று உறுதியளித்தனர்.முன்னதாக குருசுகுப்பம் தில்லை நாடார் வீதி மகளிர் குழுவை சந்தித்த என்.ஆர். காங்., வேட்பாளர் லட்சுமி நாராயணன் ஓட்டு சேகரித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X