இஸ்லாமியர்களுக்கு மானியம் உயர்த்துவேன் என்.ஆர்.காங்., வேட்பாளர் சுகுமாறன் பேச்சு

Added : ஏப் 05, 2021
Share
Advertisement
வில்லியனுார், : வில்லியனுார் தொகுதி என்.ஆர்.காங்., வேட்பாளர் சுகுமாறன் கூட்டணி கட்சி ஆதரவாளர்களுடன் சுல்தான்பேட்டை பழைய பள்ளிவாசல் வீதி, அரசூர் சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதியில் வீடு வீடாக சென்று நோட்டீஸ் வழங்கி ஜக்கு சின்னத்திற்கு ஓட்டு சேகரித்தார். வேட்பாளர் சுகுமாறன் பேசுகையில், சுல்தான்பேட்டை அனைத்து தெருக்களுக்கும் கழிவுநீர் வாய்க்கால் வசதியுடன் தரமான

வில்லியனுார், : வில்லியனுார் தொகுதி என்.ஆர்.காங்., வேட்பாளர் சுகுமாறன் கூட்டணி கட்சி ஆதரவாளர்களுடன் சுல்தான்பேட்டை பழைய பள்ளிவாசல் வீதி, அரசூர் சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதியில் வீடு வீடாக சென்று நோட்டீஸ் வழங்கி ஜக்கு சின்னத்திற்கு ஓட்டு சேகரித்தார்.

வேட்பாளர் சுகுமாறன் பேசுகையில், சுல்தான்பேட்டை அனைத்து தெருக்களுக்கும் கழிவுநீர் வாய்க்கால் வசதியுடன் தரமான சிமெண்ட் சாலை, மேல்நிலை குடிநீர் தொட்டி அமைத்து, சுத்திகரிக்கப்பட்ட சுகாதாரமான குடிநீர் தடையில்லாமல் கிடைக்க நடவடிக்கை எடுப்பேன். இப்பகுதி மாணவிகள் பயன்பெற மேல்நிலைப் பள்ளிக்கு கூடுதல் பாட பிரிவுகளை கொண்டு வருவேன். முதியோர்களுக்கு உதவித்தொகையும், புனித பயணம் மேற்கொள்ளும் இஸ்லாமியர்களுக்கு அரசு மானிய தொகை உயர்த்தி கொடுக்க நடவடிக்கை எடுப்பேன், என்றார்.வேட்பாளருக்கு ஆதரவாக கூட்டணி கட்சியை சேர்ந்த அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., நடராஜன், காதர், பா.ம.க முகமது யூனுஸ், மதியழகன், என்.ஆர்.காங்., தொகுதி தலைவர் செந்தில், ராஜேஷ், ஜனார்த்தனன், பா.ஜ., ஏகாம்பரம், தேவராசு, ரமேஷ், உட்பட பலர் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X