தேனி : தேனி தாலுகா அலுவலகம் எதிர்மாடியில் கனரா வங்கி ஊரக சுயவேலை வாய்ப்புப் பயிற்சி மையம் இயங்குகிறது.
இங்கு ஏப்.8 முதல் கம்ப்யூட்டர் 'டேலி' இலவச பயிற்சி வகுப்புக்கள் துவங்க உள்ளன. 18 வயது நிரம்பிய வேலை இல்லாத கிராமப்புற நபர்கள் விண்ணப்பிக்கலாம். பயிற்சி, உணவு இலவசம். தினமும் காலை 9:30 முதல் மாலை 5:30 மணி வரை பயற்சி 30 நாட்கள் நடைபெறும். தேர்ச்சி பெறுவோருக்கு சான்றிதழ், தொழில் துவங்க வங்கிக் கடன் பெறுவதற்கான ஆலோசனை அளிக்கப்படும்.
விருப்பம் உள்ளோர் தங்களது புகைப்படம், ஆதார் அட்டை நகல் ஆகியவற்றோடு ஏப்.8 க்குள் நேரில் வந்து முன்பதிவு செய்யலாம்.மேலும் விபரங்களுக்கு 94427 58363 என்ற அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என பயிற்சி மைய இயக்குனர்தனசேகரப்பெருமாள் தெரிவித்துள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE