மன நிறைவுடன் எனக்கு ஓட்டளியுங்கள் பாகூர் தி.மு.க., வேட்பாளர் வேண்டுகோள்| Dinamalar

மன நிறைவுடன் எனக்கு ஓட்டளியுங்கள் பாகூர் தி.மு.க., வேட்பாளர் வேண்டுகோள்

Added : ஏப் 05, 2021
Share
பாகூர் : பாகூர் தொகுதி தி.மு.க., வேட்பாளர் செந்தில்குமார் நேற்று இருளஞ்சந்தை பழங்குடியினர் வசிக்கும் பகுதியில் வீடு வீடாகச் சென்று உதயசூரியன் சின்னத்திற்கு ஓட்டு சேகரித்தார்.வேட்பாளர் செந்தில்குமார் பேசியதாவது:பாகூரின் மிகவும் பின் தங்கிய பகுதியாக இருளஞ்சந்தை உள்ளது. மனைபட்டா, கல்வீடு, தார் சாலை என்பது இப்பகுதி மக்களின் கனவாகவே உள்ளது. நான் தேர்தலில் வெற்றி

பாகூர் : பாகூர் தொகுதி தி.மு.க., வேட்பாளர் செந்தில்குமார் நேற்று இருளஞ்சந்தை பழங்குடியினர் வசிக்கும் பகுதியில் வீடு வீடாகச் சென்று உதயசூரியன் சின்னத்திற்கு ஓட்டு சேகரித்தார்.வேட்பாளர் செந்தில்குமார் பேசியதாவது:பாகூரின் மிகவும் பின் தங்கிய பகுதியாக இருளஞ்சந்தை உள்ளது.

மனைபட்டா, கல்வீடு, தார் சாலை என்பது இப்பகுதி மக்களின் கனவாகவே உள்ளது. நான் தேர்தலில் வெற்றி பெற்றதும் இப்பகுதியில் மக்களின் கோரிக்கையின் மீது முழு கவனம் செலுத்தி செயல்படுத்த நடவடிக்கை எடுப்பேன்.இந்த தொகுதியில் ஏற்கனவே 4 ஆண்டுகள் எம்.எல்.ஏ.,வாக இருந்தவர் இந்த பகுதியில் எதுவும் செய்யவில்லை. எந்த முன்னேற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. தற்போது, மீண்டும் ஒரு வாய்ப்பு தாருங்கள் என்று கேட்கிறார். அதை நீங்கள் நம்ப வேண்டாம். அது ஏற்புடையதாகவே இல்லை. அவருக்கான வாய்ப்பு இருக்க போவதில்லை.

இந்த பகுதியில் ஏற்கனவே நன்மைகள் செய்ததும் நாங்கள் தான். உங்களின் நிலைகளை புரிந்து அதை சரி செய்து தருவதும் நாங்கள் தான். நீங்கள் மனநிறைவுடன் எனக்கு ஆதரவு அளித்திட வேண்டும். வெற்றி வாய்ப்பு தந்ததும் உங்களது பிரச்னைகளுக்கான தீர்வை செய்து தருவேன். எனவே, எனக்கு உதய சூரியன் சின்னத்தில் ஓட்டு அளித்த வெற்றி பெற செய்திட வேண்டும. இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X