தொகுதியில் 8000 இளைஞர்களுக்கு வேலை உழவர்கரை சுயே., வேட்பாளர் சிவசங்கர் உறுதி

Added : ஏப் 05, 2021
Share
Advertisement
புதுச்சேரி : உழவர்கரை தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக காஸ் சிலிண்டர் சின்னத் தில் போட்டியிடும் புதுச்சேரி வணிகர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் சிவசங்கர் நேற்று, இறுதி கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டார். தொகுதியில் உள்ள முக்கிய பிரமுகர்களை சந்தித்து ஆதரவு திரட்டினார். அப்போது அவர் பேசியதாவது:உழவர்கரை தொகுதியில் படித்த இளைஞர்கள் 8000 பேர் உள்ளனர். இதில் 575 பி.டெக்.,

புதுச்சேரி : உழவர்கரை தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக காஸ் சிலிண்டர் சின்னத் தில் போட்டியிடும் புதுச்சேரி வணிகர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் சிவசங்கர் நேற்று, இறுதி கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

தொகுதியில் உள்ள முக்கிய பிரமுகர்களை சந்தித்து ஆதரவு திரட்டினார். அப்போது அவர் பேசியதாவது:உழவர்கரை தொகுதியில் படித்த இளைஞர்கள் 8000 பேர் உள்ளனர். இதில் 575 பி.டெக்., படித்த இளைஞர்களும் அடங்குவர். படித்த இளைஞர்கள் குறைந்த சம்பளத்தில் வெளியூர்களின் வேலை செய்கின்றனர். வேலை கிடைக்காத இளைஞர்கள் திசை மாறி, குடும்பத்தினரை நிலைகுலைய செய்கின்றனர்.என்னால் முடிந்த அளவிற்கு முதற்கட்டமாக படித்த இளைஞர்கள் 8,000 பேருக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தித் தர முடிவு செய்துள்ளேன். இதற்காக உழவர்கரை தொகுதியில் ஐ.டி., பார்க் கொண்டு வந்து வேலை தர உள்ளேன். இதற்கான விரிவான தொலைநோக்கு திட்டங்கள் என்னிடம் உள்ளது.

ஒரே முறை வாய்ப்பு கொடுத்தால், மாநிலத்தின் முன்னோடி தொகுதியாக உழவர்கரை தொகுதியை மாற்றிக் காட்டுவேன். அடிப் படை வசதிகள் அனைத்தும் சரி செய்வேன். இவ்வாறு அவர் பேசினார். உழவர்கரை தொகுதியில் அஜிஸ் நகர், பொன்நகர் பகுதிகளில் ஒவ்வொரு வீடாக சென்று தீவிர ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X