சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கம்பம் அரசு மருத்துவமனையில் இரவில் போதையில் ரகளை

Added : ஏப் 05, 2021
Share
Advertisement
கம்பம் : கம்பம் அரசு மருத்துவமனையில் இரவில் நோயாளிகளுடன் உதவிக்கு வருபவர்கள் மது போதையில் கலாட்டா செய்வதால், டாக்டர்கள் அச்சத்துடன் பணியாற்ற வேண்டியுள்ளது.கம்பம் அரசு மருத்துவமனை அனைத்து வசதிகளுடன் மாதத்திற்கு 200 க்கும் மேற்பட்ட பிரசவங்கள் நடக்கிறது. எனவே,சீமாங் சென்டர் வழங்கப்பட்டுள்ளது. அவசரசிகிச்சை, தீக்காய சிகிச்சை , விஷமுறிவு சிகிச்சை, சிசு பராமரிப்பு என பல

கம்பம் : கம்பம் அரசு மருத்துவமனையில் இரவில் நோயாளிகளுடன் உதவிக்கு வருபவர்கள் மது போதையில் கலாட்டா செய்வதால், டாக்டர்கள் அச்சத்துடன் பணியாற்ற வேண்டியுள்ளது.

கம்பம் அரசு மருத்துவமனை அனைத்து வசதிகளுடன் மாதத்திற்கு 200 க்கும் மேற்பட்ட பிரசவங்கள் நடக்கிறது. எனவே,சீமாங் சென்டர் வழங்கப்பட்டுள்ளது. அவசரசிகிச்சை, தீக்காய சிகிச்சை , விஷமுறிவு சிகிச்சை, சிசு பராமரிப்பு என பல பிரிவுகள் உள்ளன. இங்கு தினமும் இரவில் பிரசவம், விபத்தில் சிக்கியவர்கள் சிகிச்சைக்கென வரும் போது, நோயாளியுடன் உடன் உதவிக்கு வருபவர்கள் மது குடித்து தகராறு செய்வது வழக்கமாக நடக்கிறது.

சில நாட்களுக்கு முன் சிகிச்சைக்கு வந்த ஒருவர் மதுபோதையில் டாக்டருடன் தகராறு செய்துள்ளனர். இதை தட்டி கேட்ட செக்யூரிட்டியை தாக்கியுள்ளனர். டாக்டர்கள், செவிலியர்கள் உதவிக்கு போலீசாரை அழைத்துள்ளனர்.

மருத்துவ அலுவலர் பொன்னரசன் கூறுகையில், இரவு பணி டாக்டர்களுக்கு அச்சுறுத்தல் உள்ளது. இரவு பாதுகாப்பிற்கு போலீசாரை பணியமர்த்த இணை இயக்குநர் மூலம், தேனி எஸ்.பி.க்கு வேண்டுகோள் விடுக்க உள்ளோம் என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X