பொது செய்தி

தமிழ்நாடு

ஈஸ்டர் பண்டிகை: கிறிஸ்தவர்கள் பங்கேற்பு

Added : ஏப் 05, 2021
Share
Advertisement
தேனி : தேனி - மதுரை ரோடு உலக மீட்பர் சர்ச்சில், புனித ஏசு கிறிஸ்துவின் தவக்காலம் நிறைவு பெற்று, அவர் அடக்கம் செய்யப்பட்டு, 3ம் நாள் உயிர்ந்தெழுந்த உயிர்ப்பு பெருவிழா ஈஸ்டர்' பண்டிகையாக நேற்று முன்தினம் இரவு 11:00 மணிக்கு நடந்தது. தேனி - மதுரை மறை மாவட்ட தாழ்த்தப்பட்டவர்களுக்கான பணிக்குழுச் செயலாளர் பாதிரியார் சந்தான சகாயம் தலைமையில் திருப்பலி நடந்தது. மறை வட்ட

தேனி : தேனி - மதுரை ரோடு உலக மீட்பர் சர்ச்சில், புனித ஏசு கிறிஸ்துவின் தவக்காலம் நிறைவு பெற்று, அவர் அடக்கம் செய்யப்பட்டு, 3ம் நாள் உயிர்ந்தெழுந்த உயிர்ப்பு பெருவிழா ஈஸ்டர்' பண்டிகையாக நேற்று முன்தினம் இரவு 11:00 மணிக்கு நடந்தது.

தேனி - மதுரை மறை மாவட்ட தாழ்த்தப்பட்டவர்களுக்கான பணிக்குழுச் செயலாளர் பாதிரியார் சந்தான சகாயம் தலைமையில் திருப்பலி நடந்தது. மறை வட்ட பாதிரியார் முத்து முன்னிலை வகித்தார். ஏராளமான கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர். சிறப்பு திருப்பலி தேனி மறை வட்ட பாதிரியார் தலைமையில் நடந்தது.

கிறிஸ்துவ குடும்பத்தினர் பங்கேற்றனர்.தேனி என்.ஆர்.டி., நகரில் சி.எஸ்.ஐ., பரிசுத்த பவுல் சர்ச்சில் ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு நற்கருணை ஆராதனை நேற்று அதிகாலை 4:00 மணிக்கு நடந்தது. சபைகுரு ஜேக்கப் வின்சிலின் தலைமை வகித்தார். பாதிரியார் கண்மணி, உதவி குரு காட்ஸ்ப்ரே க்ராஸ்பெல் முன்னிலை வகித்தனர். சி.எஸ்.ஐ., கிறிஸ்துவர்கள் திரளாக பங்கேற்றனர். பின், திருவிருந்து ஆராதனை நடந்தது. ஏற்பாடுகளை சபை கமிட்டியினர் செய்திருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X