காட்டுக்கு ராமபிரான் சென்ற பாதையை கட்டமைக்க மத்திய அரசு திட்டம்

Updated : ஏப் 05, 2021 | Added : ஏப் 05, 2021 | கருத்துகள் (127) | |
Advertisement
புதுடில்லி: அயோத்தியிலிருந்து, காட்டுக்கு ராமபிரான் சென்ற பாதையை, உத்தர பிரதேசத்தில் கட்டமைக்க, மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.உத்தர பிரதேசத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. ராமாயணத்தில் ராமபிரான், தன் தந்தையின் கட்டளைப்படி, தன் மனைவி சீதை, தம்பி லட்சுமணனுடன், அயோத்தியிலிருந்து, காட்டுப்பகுதியில்

புதுடில்லி: அயோத்தியிலிருந்து, காட்டுக்கு ராமபிரான் சென்ற பாதையை, உத்தர பிரதேசத்தில் கட்டமைக்க, மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.



latest tamil news


உத்தர பிரதேசத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. ராமாயணத்தில் ராமபிரான், தன் தந்தையின் கட்டளைப்படி, தன் மனைவி சீதை, தம்பி லட்சுமணனுடன், அயோத்தியிலிருந்து, காட்டுப்பகுதியில் அமைந்திருந்த சித்ரகூட் என்ற இடத்துக்கு முதலில் சென்றார்.

இந்நிலையில், உத்தர பிரதேசத்தில் உள்ள அயோத்தியிலிருந்து, சித்ரகூட்டிற்கு ராமர் சென்ற பாதையை, 'ராம் வன் காமன் மார்க்' என்ற பெயரில் கட்டமைக்க, மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் திட்டமிட்டு உள்ளது.'அயோத்தியிலிருந்து, 210 கி.மீ., துாரத்தில் உள்ள சித்ரகூட்டிற்கு, பைசாபாத், சுல்தான்பூர், பிரதாப்கர், ஜெத்வாரா, ராஜாபூர் வழியாக தனிப்பாதை கட்டமைக்கப்பட உள்ளது' என, மத்திய சாலை போக்குவரத்து அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.


latest tamil news



ராமாயணத்தில், ராமபிரான், 14 ஆண்டுகள் காட்டில் இருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதன் பல பகுதிகள், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், மஹாராஷ்டிரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் அமைந்துள்ளன.மத்திய பிரதேச முதல்வர், பா.ஜ.,வைச் சேர்ந்த சிவ்ராஜ் சிங் சவுகான், சத்தீஸ்கர் முதல்வர்; காங்கிரசைச் சேர்ந்த பாஹெல் ஆகியோரும், தங்கள் மாநிலங்களில் ராமர் காட்டுக்கு சென்ற பாதையை உருவாக்க திட்டமிட்டுள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (127)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Anbu - Kolkata,இந்தியா
06-ஏப்-202117:46:42 IST Report Abuse
Anbu இந்த மண்ணினுடைய கலாச்சாரத்தின் அடையாளம் ராமன் ...... இதில் தவறென்ன இருக்கிறது ????
Rate this:
Cancel
Fastrack - Redmond,யூ.எஸ்.ஏ
06-ஏப்-202107:46:21 IST Report Abuse
Fastrack தண்டகாரண்யம் முழுவதும் நக்சல் ஆக்கிரமிப்பு பகுதியில் இருக்கே ....
Rate this:
Cancel
Murthy - Bangalore,இந்தியா
05-ஏப்-202123:47:55 IST Report Abuse
Murthy இதுதான் இவர்கள் வளர்ச்சி......மீண்டும் கற்காலத்திற்கு மக்களை
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X