கும்பக்கரை அருவியில் தடுப்பு அமைக்கப்படுமா | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கும்பக்கரை அருவியில் தடுப்பு அமைக்கப்படுமா

Added : ஏப் 05, 2021
Share
பெரியகுளம் : கும்பக்கரை அருவியில் ஆண்கள், பெண்களுக்கு தனித்தனியாக குளிப்பதற்கு தடுப்பு அமைக்க வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.பெரியகுளத்திலிருந்து 7 கி.மீ., துாரத்தில் கும்பக்கரை அருவி உள்ளது. கொடைக்கானல் மலைப்பகுதி,கும்பக்கரை நீர்பிடிப்பு பகுதியில் பெய்யும் மழையால் கும்பக்கரை அருவிக்கு தற்போது தண்ணீர் வரத்து உள்ளது. குற்றாலம் அருவியில் உள்ளது போல் ஆண், பெண்

பெரியகுளம் : கும்பக்கரை அருவியில் ஆண்கள், பெண்களுக்கு தனித்தனியாக குளிப்பதற்கு தடுப்பு அமைக்க வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பெரியகுளத்திலிருந்து 7 கி.மீ., துாரத்தில் கும்பக்கரை அருவி உள்ளது. கொடைக்கானல் மலைப்பகுதி,கும்பக்கரை நீர்பிடிப்பு பகுதியில் பெய்யும் மழையால் கும்பக்கரை அருவிக்கு தற்போது தண்ணீர் வரத்து உள்ளது. குற்றாலம் அருவியில் உள்ளது போல் ஆண், பெண் என தனித்தனியாக குளிக்கும் வசதி கும்பக்கரையில் இல்லை.

ஆண்கள் சிலர் துண்டு அணிவதை தவிர்த்து ஜட்டி அணிந்து குளிக்கின்றனர். இதனால் பெண்கள் சங்கடப்படுகின்றனர்.கும்பக்கரை அருவியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்தனர். முன்பு வடகரை போலீஸ்ஸ்டேஷனிலிருந்து தினமும் இருபோலீசார் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர். தற்போது போலீசார் செல்வதில்லை. அருவிக்கு போலீசாரை பாதுகாப்புக்கு அனுப்ப வேண்டும்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X