தேனி மாவட்டத்தில் தேர்தல் பிரசாரம் நிறைவு | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தேனி மாவட்டத்தில் தேர்தல் பிரசாரம் நிறைவு

Added : ஏப் 05, 2021
Share
தேனி : தேனி மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளில் பிரதான அரசியல் கட்சி, சுயேச்சை வேட்பாளர்கள் உட்பட 74 வேட்பாளர்கள் நேற்று இரவு 7:00 மணிக்கு பிரசாரத்தை நிறைவு செய்தனர்.ஆண்டிபட்டி தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் லோகிராஜன் சக்கம்பட்டி தனியார் பெட்ரோல் பங்க் முன்னும், தி.மு.க., வேட்பாளர் மகாராஜன் பஸ் ஸ்டாண்டிலும் நிறைவு செய்தார். பெரியகுளம் (தனி) தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் முருகன்

தேனி : தேனி மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளில் பிரதான அரசியல் கட்சி, சுயேச்சை வேட்பாளர்கள் உட்பட 74 வேட்பாளர்கள் நேற்று இரவு 7:00 மணிக்கு பிரசாரத்தை நிறைவு செய்தனர்.

ஆண்டிபட்டி தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் லோகிராஜன் சக்கம்பட்டி தனியார் பெட்ரோல் பங்க் முன்னும், தி.மு.க., வேட்பாளர் மகாராஜன் பஸ் ஸ்டாண்டிலும் நிறைவு செய்தார். பெரியகுளம் (தனி) தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் முருகன் வடுகப்பட்டியில் டூவீலர்களில் ஊர்வலமாக வந்து தேனி புது பஸ் ஸ்டாண்டில் நிறைவு செய்தார். தி.மு.க., வேட்பாளர் சரவணக்குமார் தாமைரைக்குளம் விலக்கில் நிறைவு செய்தார்.

போடி தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் துணை முதல்வர் பன்னீர்செல்வம், போடி அரசுப் போக்குவரத்து பணிமனையில் இருந்து கட்டபொம்மன் சிலை வரை ஊர்வலமாக சென்று பிரசாரத்தை இரவு 7:00 மணிக்கு நிறைவு செய்தார். தி.மு.க., வேட்பாளர் தங்கத்தமிழ்செல்வன் தர்மத்துப்பட்டியில் நிறைவு செய்தார்.

கம்பம் தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் சையதுகான் அரசு மருத்துவமனை முன் பிரசாரத்தை நிறைவு செய்தார். தி.மு.க., வேட்பாளர் ராமகிருஷ்ணன் வீடு, வீடாக சென்று ஓட்டு கேட்டு நிறைவு செய்தார். கம்பத்தில் அ.ம.மு.க. வேட்பாளர் சுரேஷ் நிறைவு செய்தார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X