புதுச்சேரி : லாஸ்பேட்டை தொகுதி காங்., வேட்பாளர் வைத்தியநாதன் கூட்டணி கட்சியினருடன், லாஸ்பேட்டை தொகுதி முழுவதும் வீடு வீடாக சென்று ஓட்டு சேகரித்தார்.
அசோக் நகரில் அவர் பேசியதாவது: மகாவீர் நகரில் உயர் மின் அழுத்த பிரச்னை, நெசவாளர் நகரில் நெசவாளர்கள் வாழ்வாதார பிரச்னை, சாந்தி நகர், குறிஞ்சி நகர் குமரன் நகர் பகுதிகளில் சாலை பிரச்னை, ஒரு சில இடங்களில் ரவுடிகளின் பிரச்னை உள்ளது. இவை எல்லாம் பதவியேற்ற நாள் முதல் குறைக்கப்படும்.தொகுதி முழுவதும் ஒட்டு மொத்தமாக 6 மாத காலத்திற்குள் சாலை அமைத்து தருவேன். சுய தொழில் துவங்க அரசு துறையிடம் இருந்து தகுதி அடிப்படையில் கடன் பெற்றுத் தருவேன். மாற்றுத் திறனாளிகள் வாழ்வாதாரத்தை உயர்த்த தேவையான நடவடிக்கை எடுப்பேன். மக்கள் எனக்கு தரும் ஆதரவை பார்க்கும் போது 15 ஆண்டுகள் நான் செய்த மக்கள் பணிக்கும், காங்., கூட்டணிக்கு கிடைக்கும் ஆதரவாகவே தான் பார்க்கிறேன்.
தேர்தல் நேரத்தில் மட்டும் வருபவர்களை மக்கள் அடையாளம் காண துவங்கி விட்டனர். லாஸ்பேட்டையில் இலவச பட்டா கொடுப்பதாக வாக்குறுதி அளிக்கிறார்கள். இங்கு இடம் இல்லை. இனியும் மக்கள் ஏமாற தயாரக இல்லை.இவ்வாறு அவர் பேசினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE