சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வாக்காளர்களுக்கு பணம் தி.மு.க., வேட்பாளர் மீது வழக்கு; ரூ.8.71 லட்சம் பறிமுதல்

Added : ஏப் 05, 2021
Share
Advertisement
கூடலூர் : குள்ளப்பகவுண்டன்பட்டியில் தி.மு.க.வினர் வாக்காளர்களுக்கு கொடுக்க இருந்த ரூ.8.71 லட்சத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.ஆண்டிபட்டி சட்டசபை தொகுதி தேர்தல் பறக்கும் படை அலுவலர் பிரேம்ராஜ்குமார், எஸ்.ஐ., லோகநாதன் தலைமையில் குள்ளப்பகவுண்டன்பட்டியில் வாகன சோதனை மேற்கொண்டனர். பிள்ளையார் கோயில் அருகில் தி.மு.க.,வினர் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக

கூடலூர் : குள்ளப்பகவுண்டன்பட்டியில் தி.மு.க.வினர் வாக்காளர்களுக்கு கொடுக்க இருந்த ரூ.8.71 லட்சத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

ஆண்டிபட்டி சட்டசபை தொகுதி தேர்தல் பறக்கும் படை அலுவலர் பிரேம்ராஜ்குமார், எஸ்.ஐ., லோகநாதன் தலைமையில் குள்ளப்பகவுண்டன்பட்டியில் வாகன சோதனை மேற்கொண்டனர். பிள்ளையார் கோயில் அருகில் தி.மு.க.,வினர் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக கொண்டுவந்த பணத்தை தேர்தல் பறக்கும் படையினரைக் கண்டதும் கீழே போட்டு விட்டு தப்பி ஓடினர். அதிலிருந்த ரூ.8.71 லட்சத்தைக் கைப்பற்றி கூடலூர் தெற்கு போலீசில் ஒப்படைக்கப்பட்டது. ஆண்டிப்பட்டி தி.மு.க., வேட்பாளர் மகராஜன் உட்பட மூன்று பேர் மீது தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X