பொது செய்தி

தமிழ்நாடு

தீவன தட்டுப்பாடு:கால்நடை வளர்ப்போர் சிரமம்

Added : ஏப் 05, 2021
Share
Advertisement
போடி : போடியில் கால்நடைகளுக்கு தீவன தட்டுப்பாட்டால், கால்நடை வளர்க்கும் சிறு,குறு விவசாயிகள் சிரமம் அடைகின்றனர்.மாவட்டத்தில் சிறு, குறு விவசாயிகள் விவசாயத்துடன் கால்நடை வளர்ப்பிலும் ஆர்வம் காட்டினர். பால்மாடுகளை வளர்ப்பதால் பால் உற்பத்தி, சாண கழிவுகள் விவசாயத்திற்கு உரமாக பயன்படும். கன்றுகள் வளர்ப்பதால் லாபமாக இருந்தது. கால்நடைகளுக்கு தோட்ட பகுதிகளில்

போடி : போடியில் கால்நடைகளுக்கு தீவன தட்டுப்பாட்டால், கால்நடை வளர்க்கும் சிறு,குறு விவசாயிகள் சிரமம் அடைகின்றனர்.

மாவட்டத்தில் சிறு, குறு விவசாயிகள் விவசாயத்துடன் கால்நடை வளர்ப்பிலும் ஆர்வம் காட்டினர். பால்மாடுகளை வளர்ப்பதால் பால் உற்பத்தி, சாண கழிவுகள் விவசாயத்திற்கு உரமாக பயன்படும். கன்றுகள் வளர்ப்பதால் லாபமாக இருந்தது. கால்நடைகளுக்கு தோட்ட பகுதிகளில் கிடைக்கும் பச்சை தீவனங்கள், சோளம், மக்காச்சோள அறுவடைக்குப் பின் கிடைக்கும் உலர் தட்டைகள் தீவனமாக பயன்படுத்தி வந்தனர்.

தற்போது பருவமழை குறைந்ததால் நிலத்தடி நீர்குறைந்து விளை நிலங்கள் தரிசாகவும், பிளாட்களாக மாறுகிறது. பச்சை தீவனங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளன. மானாவாரி நிலக்கடலை சரியான விளைச்சல் இல்லாமல் மகசூல் பாதித்துள்ளது. நிலக்கடலை தவிர்த்து தக்காளி, துவரை பயிரிடப்பட்டு வருகின்றனர்.

மாட்டுத்தீவனமாக பயன்படும் கடலை, சோளம் பயிர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. சிறு விவசாயிகள் மாட்டுத்தீவனத்திற்காக 3 கி.மீ.,துாரம் உள்ள மலை அடிவாரத்திற்கு சென்று பச்சை தீவனங்களை விலைக்கு வாங்கி கொண்டு வர சிரமம் அடைகின்றனர். தீவன தட்டுப்பாட்டால் கால்நடை வளர்ப்போர் சிரமம் அடைந்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X