புதுச்சேரி : புதுச்சேரியில் ஓட்டுப்பதிவு அமைதியான முறையில் நடத்துவதற்கான முழுமையானஏற்பாடுகளை தேர்தல் துறை செய்துள்ளது.
இது குறித்து தலைமை தேர்தல் அதிகாரி சுர்பீர்சிங் அளித்த பேட்டி:புதுச்சேரி மாநிலத்தில் 4 லட்சத்து 72 ஆயிரத்து 341 ஆண் வாக்காளர்கள், 5 லட்சத்து 31 ஆயிரத்து 383 பெண் வாக்காளர்கள், இதர பிரிவினர் 116, புலம்பெயர்ந்த இந்தியர்கள் 357, பணி தொகுதி வாக்காளர்கள் 310, உட்பட 10 லட்சத்து 4,507, வாக்காளர்கள் உள்ளனர்.இதில் 11 லட்சத்து 915 மாற்றுத்திறனாளிகள், 80 வயதிற்கு மேற்பட்டோர் 17 ஆயிரத்து 41 பேர் உள்ளனர். இதில் 18 மற்றும் 19 வயதுடைய 31 ஆயிரத்து 864 வாக்காளர்கள் ஓட்டளிக்க உள்ளனர்.புதுச்சேரி முழுவதும் 100 சதவீத வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.
வாக்காளர் அடையாள அட்டை அல்லது இந்திய தேர்தல் ஆணையம் அனுமதித்துள்ள ஆதார் கார்டு, பான் கார்டு, டிரைவிங் லைசன்ஸ் உள்ளிட்ட ஏதேனும் ஒன்றை காண்பித்து ஓட்டளிக்கலாம். 16 வேட்பாளர்கள் போட்டியிடும் உழவர்கரை, நெல்லித்தோப்பு தொகுதியில் மட்டும் 2 ஓட்டு மிஷின் பயன்படுத்தப்படும்.மேலும் 1558 கன்ரோல் யூனிட், 1677 ஓட்டுப்பதிவு மிஷின், 1558 வி.வி.பாட் மிஷின் பயன்படுத்தப் படும். மாநிலம் முழுவதும் 635 இடங்களில், 1558 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. இதில், 952 பிரதான ஓட்டுச்சாவடி, 606 துணை ஓட்டுச்சாவடியாக இருக்கும்.ஒவ்வொரு தொகுதியிலும் முற்றிலும் பெண்களால் இயங்கும் ஒரு ஓட்டுச்சாவடி அமைத்துள் ளோம். மாற்றுத்திறனாளிகள் ஓட்டளிக்க வசதிகள் செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் உள்ள 30 தொகுதியில் போட்டியிட 487 வேட்பு மனுக்கள் பெறப்பட்டது. இதில், 324 வேட்பாளர்கள் இறுதி செய்யப்பட்டுள்ளனர். அங்கீகரிக்கப்பட்ட கட்சி வேட்பாளர்கள் 70, சுயேட்சை, இதர வேட்பாளர்கள் 254, பெண் வேட்பாளர்கள் 35; அங்கீகரிக்கப்பட்ட கட்சியின் பெண் வேட்பாளர்கள் 3 பேர்.பார்வையாளர்கள்தேர்தல் ஆணையம் 10 பொது பார்வையாளர்கள், 10 தேர்தல் செலவின பார்வையாளர்கள், 2 சிறப்பு செலவின பார்வையாளர்கள், 4 காவல் பார்வையாளர்கள், 1 சிறப்பு காவல் பார்வையாளர்களும், 230 நுண் பார்வையாளர்களை நியமித்துள்ளது.2833 பெண் ஓட்டுச்சாவடி அலுவலர்கள் மற்றும் 719 மத்திய அரசு ஊழியர்கள் உட்பட 6835 ஓட்டுச் சாவடி அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 2420 மாநில போலீஸ், 901 ஐ.ஆர்.பி.என்., கர்நாடகாவில் இருந்து வரழைத்துள்ள 100 பேர் உட்பட 1490 பேர், 40 கம்பெனி மத்திய ஆயுதப்படையினர் தேர்தல் பணியில் ஈடுப்பட்டுள்ளனர்.
இதுவரை 80 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் 2928, மாற்றுத்திறனாளிகள் 1546, கொரோனா பாதித்து தனிமைப்படுத் திய 34 பேர், அத்தியா வசிய பணியில் உள்ள 68 பேரும், ஓட்டுச்சாவடி பணியில் உள்ள 8117 பேர் உட்பட 12 ஆயிரத்து 693 பேர் தபால் ஓட்டளித்துள்ளனர்.தேர்தல் தினத்தில் அனைத்து வாக்குச்சாவடியும் கிருமி நாசினி மூலம் சுத்திகரிக்கப்படும். வாக்குச் சாவடிக்குள் நுழையும் முன்பு, வாக்காளர்களின் உடல் வெப்ப நிலை பரிசோதித்து, கை உறை வழங்கப்படும்.புதுச்சேரியில் 278, காரைக்காலில் 30, மாகி 8, ஏனாமில் 14 உட்பட 330 ஓட்டுப்பதிவு மையங்கள் பதற்றமானவை. இதில், ஏனாமில் 16 ஓட்டுச்சாவடிகள் மிகவும் பதற்றமானவையாக கண்டறியப்பட்டுள்ளது.
பதற்றமான ஓட்டுச்சாவடிகளில் மத்திய ஆயுதப்படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர். ஓட்டுச்சாவடி வெளியில் கண்காணிப்பு கேமரா பொருத்தி கண்காணிக்கப்படும்.இதுவரை 194 உரிமம் பெற்ற ஆயுதங்கள் பறிமுதல், செய்யப்பட்டுள்ளன. 1323 நபர்கள் மீது குற்றவியல் நடைமுறைச்சட்டத்தில் நடவடிக்கையும், 46 பேருக்கு வெளியில் வரமுடியாத பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட் டுள்ளது.105 பறக்கும்படையினர், 105 நிலை கண்காணிப்பு குழு, 25 சுழலும் நிலை கண்காணிப்பு குழுக்கள், 35 சோதனைச்சாவடியும் அமைக்கப்பட்டுள்ளது.பறிமுதல்இதுவரை ரூ.5.40 கோடி பணமும், ரூ. 68.38 லட்சம் மதிப்புள்ள மதுபானம், ரூ. 3.10 கோடி மதிப்பிலான புடவை உள்ளிட்ட இதர பொருட்களும், ரூ.27.41 கோடி மதிப்பிலான தங்கம், வெள்ளி நகைகள் உட்பட ரூ. 36.85 கோடி மதிப்பிலான பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.தேர்தல் நடத்தை விதிகள் மீறியதாக இது வரை 40 வழக்குகள் பதியப்பட்டுள்ளது. கலால் சட்டத்தின் கீழ் 76 வழக்குகளும், பணம், போதை பொருட்கள் பறிமுதல் தொடர்பாக 12 உட்பட 128 வழக்குகள் பதியப்பட்டுள்ளன.சி விஜில் மூலம் 123 புகார்கள், தேசிய குறை தீர்வு முறை மூலம் 99 புகார் களும், 1950 தொலைபேசி மூலம் 548 புகார்கள் பெற்றப்பட்டது. இதில் 25 மட்டுமே நிலுவையில் உள்ளது. மற்றவை முடித்து வைக்கப்பட்டது. தேர்தல் ஓட்டு எண்ணும் மையங்கள் 3 ஆக அதிகரிக்கப்பட் டுள்ளது.லாஸ்பேட்டை மகளிர் பாலிடெக்னிக் மையத் தில், உப்பளம், உருளை யன் பேட்டை, நெல்லித் தோப்பு, முதலியார்பேட்டை, அரியாங்குப்பம், மணவெளி, ஏம்பலம், நெட்டபாக்கம், பாகூர் தொகுதியும், மோதிலால் நேரு பாலிடெக்னிக் கல்லுாரியில் மண்ணாடிப் பட்டு, திருபுவனை, ஊசுடு, மங்கலம், வில்லியனுார், உழவர்கரை, கதிர்காமம், இந்திரா நகர், தட்டாஞ்சாவடி தொகுதியும், தாகூர் கலை கல்லுாரியில் காமராஜ் நகர், லாஸ்பேட்டை, காலாப்பட்டு, முத்தியால்பேட், ராஜ்பவன் தொகுதி ஓட்டுகள் எண்ணப்படும். ஓட்டளிக்கும் நேரம், காலை 7:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை. இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE