தமிழ்நாடு

அதிக பதட்டம் நிறைந்த 271 ஓட்டுச்சாவடிகளில் பலத்த பாதுகாப்பு

Added : ஏப் 05, 2021
Share
Advertisement
நான்கு சட்டசபைத் தொகுதிகளில் 1561 ஓட்டுச் சாவடிகள் உள்ளன. இதில் ஆண்டிபட்டியில் 20, பெரியகுளம் (தனி)18, போடியில் 15, கம்பத்தில் 20 ஓட்டுச்சாவடிகள் என, 73 ஓட்டுச்சாவடிகள் அதிக பதட்டம் நிறைந்தவையாக கண்டறியப்பட்டுள்ளன. 145 இடங்களில் உள்ள 271 ஓட்டுச்சாவடிகள் பிரச்னைக்குறியவையாகும். இங்கு ஏற்கனவே பாதுகாப்பு பணியில் இருந்தவர்களுடன் கூடுதலாக ஒரு போலீசார், 4 துப்பாக்கி ஏந்திய துணை ராணு

நான்கு சட்டசபைத் தொகுதிகளில் 1561 ஓட்டுச் சாவடிகள் உள்ளன. இதில் ஆண்டிபட்டியில் 20, பெரியகுளம் (தனி)18, போடியில் 15, கம்பத்தில் 20 ஓட்டுச்சாவடிகள் என, 73 ஓட்டுச்சாவடிகள் அதிக பதட்டம் நிறைந்தவையாக கண்டறியப்பட்டுள்ளன. 145 இடங்களில் உள்ள 271 ஓட்டுச்சாவடிகள் பிரச்னைக்குறியவையாகும். இங்கு ஏற்கனவே பாதுகாப்பு பணியில் இருந்தவர்களுடன் கூடுதலாக ஒரு போலீசார், 4 துப்பாக்கி ஏந்திய துணை ராணு வீரர்கள் ஓட்டுப்பதிவு நாளில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனர்.

பாதுகாப்புப் பணியில் 9 டி.எஸ்.பி.,க்கள், 35 இன்ஸ்பெக்டர்கள், 89 எஸ்.ஐ.,க்கள், 294 சிறப்பு எஸ்.ஐ.,க்கள், இதர போலீசார் 1019 பேர், தமிழ்நாடு சிறப்பு காவல்படை பிரிவினர் 110 பேர், முன்னாள் ராணுவ வீரர்கள் 130 பேர், மத்திய தொழிலக பாதுகாப்புப் படை வீரர்கள் 490பேர், 9 துணை ராணுவ கம்பெனி வீரர்கள் 630 பேர் என மொத்தம் 2806 பேர் ஓட்டுப்பதிவு நாளில் பாதுகாப்பில் ஈடுபட உள்ளனர். இதுதவிர என் தலைமையில் அதிவிரைவுப் படை வீரர்கள் ரோந்துப் பணியில் ஈடுபட உள்ளோம் .'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X