அரசியல் செய்தி

தமிழ்நாடு

உண்மையில் ஜெயித்தவர் யார்? தெரியாமலே அடுத்த தேர்தல்!

Updated : ஏப் 05, 2021 | Added : ஏப் 05, 2021 | கருத்துகள் (59)
Share
Advertisement
கடந்த தேர்தலில், ராதாபுரம் தொகுதியில், தி.மு.க., சார்பில் அப்பாவு; அ.தி.மு.க., சார்பில் இன்பதுரை போட்டியிட்டனர். '49 ஓட்டு வித்தியாசத்தில் இன்பதுரை வெற்றி' என, அறிவிக்கப்பட்டது. ஓட்டு எண்ணும் போது, '203 தபால் ஓட்டுகள் செல்லாது' என, நிராகரிக்கப்பட்டன. காரணம், 'தபால் ஓட்டு பதிவு செய்யும் வாக்காளர்களுக்கான உறுதிமொழி படிவத்தை, நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் இருவர்,
TamilnaduElections, Radhapuram, DMK, ADMK, ராதாபுரம், திமுக, அப்பாவு, இன்பதுரை, அதிமுக

கடந்த தேர்தலில், ராதாபுரம் தொகுதியில், தி.மு.க., சார்பில் அப்பாவு; அ.தி.மு.க., சார்பில் இன்பதுரை போட்டியிட்டனர். '49 ஓட்டு வித்தியாசத்தில் இன்பதுரை வெற்றி' என, அறிவிக்கப்பட்டது. ஓட்டு எண்ணும் போது, '203 தபால் ஓட்டுகள் செல்லாது' என, நிராகரிக்கப்பட்டன. காரணம், 'தபால் ஓட்டு பதிவு செய்யும் வாக்காளர்களுக்கான உறுதிமொழி படிவத்தை, நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் இருவர், 'அட்டெஸ்ட்' செய்துள்ளனர்; அவர்கள், 'கெஜட்டட்' அதிகாரிகள் அல்ல' என, அதிகாரி சொன்னார்.

தி.மு.க., அப்பாவு இதை எதிர்த்து ஐகோர்ட்டில் வழக்கு போட்டார். 'நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள், 'அட்டெஸ்ட்' செய்தது செல்லும். எனவே, தபால் ஓட்டுக்களையும், மின்னணு இயந்திரங்களில் பதிவான ஓட்டுகளில், மூன்று சுற்று ஓட்டுகளையும் மீண்டும் எண்ண வேண்டும்' என, நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதன்படி மீண்டும் ஓட்டு எண்ணிக்கை நடந்தது. அப்போது, அ.தி.மு.க., இன்பதுரை சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்தார். 'ஓட்டு எண்ணி முடித்தாலும், முடிவை அறிவிக்கக்கூடாது' என, நீதிபதிகள் தடை விதித்தனர்.


latest tamil news


இதனால், முடிவு வெளியே தெரியவில்லை. ஆனால், ஓட்டு எண்ணும் போது உடன் இருந்த, இரு கட்சியினருக்கும், முடிவு என்ன என்பது தெரியும். சுப்ரீம் கோர்ட் சீக்கிரம் விசாரித்து தீர்ப்பு சொல்லும் என, மக்கள் எதிர்பார்த்தனர். 'கொரோனா' போன்ற பல காரணங்களால் அப்படி நடக்கவில்லை. அதற்குள் அடுத்த தேர்தலும் வந்து விட்டது. நாளை ஓட்டு பதிவு. அதே, இரண்டு பேர்தான் இப்போதும் மோதுகின்றனர். திருச்செந்துார் தொகுதியில், தி.மு.க., - எம்.எல்.ஏ., அனிதா ராதாகிருஷ்ணன் வெற்றியை எதிர்த்த வழக்கு, ஐகோர்ட்டில் நிலுவையில் உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (59)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
06-ஏப்-202106:08:34 IST Report Abuse
D.Ambujavalli தேர்தல் வழக்குகள் நிலுவையில் உள்ளவரை வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டனர் பதவி ஏற்கக்கூடாது என்று ஆணையம் நிபந்தனையுடன் நிறுத்தி வைக்கலாம். அப்போதுதான் பறந்து பறந்து கேஸை முடிக்க வைப்பார்கள் இந்த வெண்டைக்காய், விளக்கெண்ணெய் தீர்ப்பை நிறுத்தி வைத்து எத்தனை பேரிடம் வாங்கிய லஞ்சம், கான்ட்ராக்டால் அவரைக் கொழிக்க விட்டார்களோ ? அம்மா தீர்ப்பை கேஸ் முடிந்த ஜூன் மாதமே வெளியிட்டிருந்தால் அவர்கள் ஜெயிலிலாவது உயிரோடிருந்திருப்பாரோ என்னவோ ?
Rate this:
Cancel
raja - Kanchipuram,இந்தியா
05-ஏப்-202122:23:35 IST Report Abuse
raja இந்தியாவில் ஒரு துறையும் உருப்படி இல்லை
Rate this:
Cancel
skanaku - CHENNAI,இந்தியா
05-ஏப்-202118:47:50 IST Report Abuse
skanaku பாவம் இந்தியா, பாவம் ஜனநாயகம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X