உவமை நன்றாகத் தான் இருக்கிறது. எனினும் கள நிலவரம் தி.மு.க.வுக்கு கலவரமாக அல்லவா இருக்கிறது...

Updated : ஏப் 05, 2021 | Added : ஏப் 05, 2021 | கருத்துகள் (138)
Share
Advertisement
அனைத்து தொகுதிகளிலும் கருணாநிதி தான் போட்டியிடுகிறார் என நினைத்து கொள்ளுங்கள்; கருணாநிதியை எதிர்த்து நிற்பது மோடி தான் என நினைத்துக் கொள்ள வேண்டும். கருணாநிதியா, மோடியா என, ஒரு கை பார்த்து விடுவோம்.- தி.மு.க., மாநில இளைஞரணி செயலர் உதயநிதி'உவமை நன்றாகத் தான் இருக்கிறது; எனினும், கள நிலவரம், தி.மு.க.,வுக்கு கலவரமாக அல்லவா இருக்கிறது...' என, சொல்லத் தோன்றும் வகையில்,
உவமை நன்றாகத் தான் இருக்கிறது. எனினும் கள நிலவரம் தி.மு.க.வுக்கு கலவரமாக அல்லவா இருக்கிறது...

அனைத்து தொகுதிகளிலும் கருணாநிதி தான் போட்டியிடுகிறார் என நினைத்து கொள்ளுங்கள்; கருணாநிதியை எதிர்த்து நிற்பது மோடி தான் என நினைத்துக் கொள்ள வேண்டும். கருணாநிதியா, மோடியா என, ஒரு கை பார்த்து விடுவோம்.
- தி.மு.க., மாநில இளைஞரணி செயலர் உதயநிதி


'உவமை நன்றாகத் தான் இருக்கிறது; எனினும், கள நிலவரம், தி.மு.க.,வுக்கு கலவரமாக அல்லவா இருக்கிறது...' என, சொல்லத் தோன்றும் வகையில், தி.மு.க., மாநில இளைஞரணி செயலர் உதயநிதி பேச்சு.தி.மு.க., கூட்டணி, 200 தொகுதிகளில் வெற்றி என்ற கருத்து கணிப்பு, தி.மு.க., தலைவர் ஸ்டாலினின் மருமகன் சபரீசன் வீட்டில் நடத்தப்பட்ட வருமான வரி சோதனையால், 234 தொகுதிகளிலும், தி.மு.க., வெற்றி உறுதி என, உருமாறிவிட்டது.
- தி.மு.க., வில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ., கோவை தங்கம்


'கட்சி மாறி, சில நாட்கள் கூட ஆகவில்லை. அதற்குள், தி.மு.க.,வினரை மிஞ்சி விட்டீர்களே, 'ஜிங்சாங்' செயலில்...' என, கூறத் தோன்றும் வகையில், த.மா.கா., வில், 'சீட்' கிடைக்காத விரக்தியில், தி.மு.க., வில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ., கோவை தங்கம் பேட்டி.தொண்டர்களின் தன்மானத்தைக் காக்கவே, அ.ம.மு.க.,வுடன், தே.மு.தி.க., கூட்டணி வைத்துள்ளது. உண்மையான அ.தி.மு.க., - அ.ம.மு.க., தான். மாற்றத்தை உருவாக்கவே அ.ம.மு.க.,வுடன் கூட்டணி வைத்துள்ளோம்.
- தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன்


'இப்படி பொய் பேசுவதை விட்டு, 'எல்லாரும் கழற்றி விட்டு விட்டனர்; கைகொடுத்தது, அ.ம.மு.க., தான்' என வெளிப்படையாக பேசி, ஓட்டுகளை சேகரிக்கலாமே...' என, அறிவுரை கூறத் தோன்றும் வகையில், தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் பேச்சு.அரசு அதிகாரிகளின் துணையோடு, பணப் பட்டுவாடா செய்யப்படுவதாக புகார்கள் வருகின்றன. இரவு நேரங்களில் மின்சாரத்தை நிறுத்தி, பணப் பட்டுவாடா செய்வதாகவும் புகார்கள் வருகின்றன. இதை தடுத்து நிறுத்த வேண்டிய பொறுப்பு, தேர்தல் ஆணையத்திற்கு உள்ளது.
- இந்திய கம்யூ., மாநில செயலர் முத்தரசன்


latest tamil news

'தோல்வி பயம் வரும்போது, இதுபோன்ற உதறல்கள் வரத் தான் செய்யும்...' என, கூறத் தோன்றும் வகையில், இந்திய கம்யூ., மாநில செயலர் முத்தரசன் பேட்டி.காவிரி, முல்லை பெரியாறு பிரச்னையில், தமிழக உரிமையை விட்டு கொடுத்தது, தி.மு.க., தான்; ஆனால், பெற்றுத் தந்தது, மறைந்த முதல்வர் ஜெயலலிதா. அவரது வழியில், மத்திய அரசிடம் பேசி, 11 மருத்துவமனைகள் மற்றும், 'எய்ம்ஸ்' மருத்துவமனையை, முதல்வர் இ.பி.எஸ்., பெற்றுத் தந்துள்ளார்.
- தமிழக வருவாய் துறை அமைச்சர் உதயகுமார்


'மதுரையில் 'எய்ம்ஸ்' மருத்துவமனை, இன்னும், செங்கல் அளவில் தான் உள்ளது என, தி.மு.க.,வினர் கிண்டல் செய்கின்றனரே...' என, நினைவுபடுத்தத் தோன்றும் வகையில், தமிழக வருவாய் துறை அமைச்சர் உதயகுமார் பேச்சு.


Advertisement


வாசகர் கருத்து (138)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Venkataramanan Thiru - Sanjose, CA,யூ.எஸ்.ஏ
09-ஏப்-202105:27:35 IST Report Abuse
Venkataramanan Thiru பொய்களை பரப்புவதில் வல்லுநர்கள் பிஜேபியில் நிறைய இருக்கிறார்கள்
Rate this:
karutthu - nainital,இந்தியா
09-ஏப்-202109:03:28 IST Report Abuse
karutthuஏன் தி மு க வில் மட்டும் கொஞ்சமாகவா இருக்கிறார்கள் ?...
Rate this:
sankar - Nellai,இந்தியா
09-ஏப்-202110:05:35 IST Report Abuse
sankarதிமுக அதில் பி ஹெச் டி...
Rate this:
Cancel
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
07-ஏப்-202111:38:44 IST Report Abuse
Malick Raja நாட்டில் விலைவாசி உயர்வுக்கும் வறுமைக்கும் அடிப்படைகாரமாக இருக்கும் பெட்ரோல் டீசல் கேஸ் விலைகள் பற்றியெல்லாம் கருத்துக்கள் வருவதில்லை காரணம் ஊதியத்தில் கருத்துக்கள் எழுவோர்கள் கூடுதலாகி இருப்பது உண்மை ..
Rate this:
Cancel
meenakshisundaram - bangalore,இந்தியா
06-ஏப்-202104:45:19 IST Report Abuse
meenakshisundaram என்னவோ போடா மாதவா இந்த மாதிரி அசிங்க மூஞ்சி ஹீரோக்கள் இனிமே சினிமா சான்ஸ் இல்லேன்னா நல்லது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X